தினம் ஒரு ''காசி ஆனந்தன்'' கவிதை

முரண்.. இறைவனின் வாகனம் என்றான் நாயை அவதாரம் என்றான் பன்றியை இறைவனே என்றான் குரங்கை இவனே திட்டினான் என்னை நாயே! பன்றியே! குரங்கே!

Thursday, November 26, 2009

மாவீரர் நாள் பொதுக்கூட்டங்கள் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

உலெகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் நவம்பர் 27‐ஆம் நாளை ஈழப்போரில் உயிர் நீத்த போராளிகளின் நினைவாக மாவீரதினமாக கொண்டாடி வருகின்றனர். மே மாதப் போரின் முடிவுக்கு பின்னர் பிரபாகரன் தொடர்பான சர்ச்சைகளுக்கிடையே தமிழகத்தில் இந்த வருடம் மாவீரர் தினம் பெருமளவில் கொண்டாடப்படுகிறது.


பல்வேறு அமைப்புகளின் பிரதான ஈழ ஆதரவுக் கட்சிகளும் இவ்விழாவைக் கொண்டாடுவதில் ஆர்வம் காட்டுகின்றன. சென்னை நகரம் முழுக்க போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல் வேறு இடங்களிலும் மாவீரர் நாள் விழாக்களை கொண்டாட போலீசார் பல் வேறு தடைகளை விதித்திருந்தனர். இது தொடர்பாக நெடுமாறனும் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் சென்னை கே.கே.நகர் அருகில் உள்ள எம்.ஜி.ஆர்.நகரில் தமிழ் மாணவர் பேரவை இளைஞர் பேரவை அமைப்பினர் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி மாநகர போலீசில் விண்ணப்பித்தனர். ஆனால் இதற்கு போலீசார்அனுமதி மறுத்தனர். அரசியல் சாசனம் அளித்துள்ள பேச்சுரிமையை போலீசார் மறுப்பதாகக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மாணவர் பேரவை தமிழ் இளைஞர்பேரவை பொறுப்பாளர் பாலகுரு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்று விசாரணை செய்த நீதிபதி சுகுணா மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறையினர் அனுமதி அளிக்க வேண்டும், இதற்காக மீண்டும் ஒருமுறை காவல்துறையினருக்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு தமிழ் மாணவர் பேரவை அமைப்பினர் மனு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

நீதிமன்றம் இப்படியான உத்தரவிட்டிருப்பது தமீழீழ ஆதரவாளர்களிடையே பெரும் உற்சாகத்தை தோற்று வித்திருக்கிறது. தமிழகமெங்கிலும் இந்த நீதிமன்ற ஆணையைக் காட்டியே அவர்கள் போலீசின் தடையை எதிர் கொள்ள முடியும் என்கிறார்கள். சிலர் சரி என்னதான் செய்கிறார்கள் பார்ப்போமே.

No comments:

இன்னொறு இடுகை

Related Posts with Thumbnails