பிரபாகரன் செத்துவிட்டாரா?ஈழம் அவ்வளவுதானா? அழுத தமிழச்சிக்கு சீமான் ஆறுதல் பேச்சு
நாம் தமிழர் இயக்கம் ஆரம்பித்து தமிழகமெங்கும் கலந்தாய்வு கூட்டம், பொதுக்கூட்டம் நடத்திவருகிறார் சீமான்.
இன்று(26.10.09) புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் தீலீபன் திடலில் பொதுக்கூட்டம் நடத்துகிறார். இன்று மாலை 6.30 மணிக்கு இக்கூட்டம் தொடங்கியது.
சீமான் இக்கூட்டத்தில், ‘’பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்ததும் முதன் முதலில் பேருந்துகளை ஓடவிடாமல் தடுத்து நிறுத்திய மண் இந்த வடகாடு மண். அது மட்டுமல்ல; இது பாவாணன் உளவிய மண். இந்த மண்ணில் தம்பி சீமான் பேசுவதை பெருமையக நினக்கிறேன்.
சுதந்திர இந்தியாதான். ஆனால் நாம் சுதந்திரமாக இருக்கிறோமா? நம் இனம் சுதந்திரமாக இருக்கிறதா? இல்லையே. இது எப்போது மாறும்.
ஈழம் அவ்வளவுதானா. பிரபாகரன் செத்துட்டார் என்று சொல்வது உண்மைதானா என்று கும்பகோணத்தில் என்னிடத்தில் அழுதாள்.
நான் அவளிடம், கலங்காதே. ஈழக்கனவுகள் நிறைவேறும் என்றூ சொல்லிவிட்டு வந்தேன்.
ஆண்ட பரம்பரை மாண்டு கிடக்கிறதே. இதைப்பேசுவது தேச பிழையா. அமெரிக்காவில் கூட புலிகள் இயக்கத்தை பற்றி பேச உரிமை இருக்கிறது. அங்கே ஒரு கையில் புலிக்கொடியும் மறுகையில் பிரபாகரன் படமும் ஏந்தி போராட்டம் நடத்த முடிகிறது. ஆனால் இந்தியாவிலோ அது முடியவில்லை.
இலங்கை சென்ற திருமாவளவனை பிரபாகரனுடன் இருந்திருந்தால் செத்திருப்பீர்கள் என்று மிரட்டியிருக்கிறான் ராஜபக்சே.
இந்தியா, பாகிஸ்தான்.ஜப்பான் நாடுகள் உதவவில்லையென்றால் கொஞ்சம் யோசித்துப்பார் ராஜபக்சே; நீ செத்திருப்பாய். நீ எங்களைப்பார்த்து மிரட்டுகிறாய்.
பிறந்து வளர்ந்த பூமியில் வாழ விடுங்கள் என்று சொல்லுகிறோம். தமிழர்கள் எல்லோரும் புலியாக மாறும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. பூச்சாண்டி காட்டாதீர்கள் எங்கள் ஈழக்கனவு நிறைவேறும் காலம் கனிந்துகொண்டிருக்கிறது’’என்றுபேசினார்
No comments:
Post a Comment