தினம் ஒரு ''காசி ஆனந்தன்'' கவிதை

முரண்.. இறைவனின் வாகனம் என்றான் நாயை அவதாரம் என்றான் பன்றியை இறைவனே என்றான் குரங்கை இவனே திட்டினான் என்னை நாயே! பன்றியே! குரங்கே!

Saturday, November 7, 2009

சைமனா சீமான்?


‘சைமன் என்கிற சீமான் இந்து மதத்தை திட்டி பேசுகிறார்’ என்று பி.ஜே.பியை சேர்ந்த எச். ராஜா சொல்லியிருக்கிறாரே?

-எல். சுரேஷ்.

Mathi Book intro function

சீமான் – சைமன் இல்லை. அவர் கிறித்தவரும் இல்லை.

அவருடைய பாஸ்போர்ட்டிலிருந்து அவரை பற்றியஆவணங்கள் எல்லாமே சீமான் என்கிற பெயரில்தான் இருக்கிறது.

அவர் பெரியார் கொள்கையில் ஊறிய நாத்திகர்.

கோவை கூட்டத்தில், ‘இந்துக்களின் ஆண்குறியை வெட்ட வேண்டும். பெண்களை கற்பழிக்க வேண்டும்’ என்று சீமான் பேசியதாக ஒரு பச்சை பொய்யை பரப்பினார்கள் அல்லவா? அதுபோன்ற ஒரு பொய்தான் அவர் சைமன் என்பதும்.

(இஸ்லாமியர்களை பற்றி ஆர்எஸ்எஸ் காரர்கள் தங்கள் மேடையில் இப்படிதான் அநாகரீகமாக, காட்டுமிராண்டித்தனமாக பேசுவார்கள், அதையே சீமான் இந்துக்களை பற்றி பேசியதாக மாற்றிச் சொல்கிறார்கள்.

பெரியார் தொண்டன் ஒருபோதும் இதுபோன்ற இழிச் சொற்களை பயன்படுத்தமாட்டான்.)

சைமனோ, அம்ஜத்கானோ யாராக இருந்தாலும் அவர் நாத்திகராக இருந்தால் அவருக்கு எந்த மதத்தையும் திட்டி பேசுவதற்கு உரிமையுண்டு.

சீமான் இந்து மதத்தை திட்டி டி.ஜி.எஸ். தினகரன் கூட்டத்திலா பேசினார்?

பெரியார் கூட்டத்தில் பேசினார்.

அது இருக்கட்டும், எச். ராஜா என்கிற பார்ப்பன இந்து மத- ஜாதி வெறியன், இஸ்லாம் – கிறித்துவ மதங்களை திட்டி பேசிக் கொண்டு,

அப்படி திட்டி பேசுவதற்காகவே, பாஜக, ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள் போன்ற கட்சிகளை நடத்திக் கொண்டு ‘அடுத்த மதக்காரன் இந்து மதத்தை திட்டி பேசுகிறான்’ என்று சொல்வதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது?

பார்ப்பன இந்து மத வெறியர்களின் மூலதனமே பச்சை பொய்தான்.

நன்றி: வே.மதிமாறன் அண்ணன் அவர்களுக்கு

No comments:

இன்னொறு இடுகை

Related Posts with Thumbnails