தமிழர் என்பது மொழிப் பெயர். திராவிடர் என்பது இனப் பெயர். தமிழ் பேசும் மக்கள் யாவரும் தமிழர் என்று தலைப்பில் கூட முடியும். ஆனால், தமிழ் பேசும் அத்தனை பேரும் திராவிடர் ஆகிவிட முடியாது. இனத்தால் திராவிடனான ஒருவன் எந்தச் சமயத்தை சார்ந்த வனாயிருந்தாலும், எந்த மொழி பேசுபவனா யிருந்தாலும் அவன் திராவிடர் என்ற தலைப்பில் தான் சேருவான்.
ஆகையால், திராவிட மொழி தமிழ் என்ற காரணத்திற்காக, தமிழ் பேசும் திராவிடன் அல்லாத ஒருவன் - மொழி காரணமாக மட்டுமே தன்னைத் திராவிடன் என்று கூறிக் கொள்ள முடியாது.
‘தமிழர்’ என்றால் பார்ப்பானும் தன்னைத் தமிழன் என்று கூறிக் கொண்டு நம்முடன் கலந்து கொண்டு மேலும் நம்மைக் கெடுக்கப் பார்ப்பான். திராவிடர் என்றால் எந்தப் பார்ப்பானும் தன்னைத் திராவிடன் என்று கூறிக் கொண்டு நம்முடன் சேர முற்பட மாட்டான். அப்படி முன் வந்தாலும் அவனுடைய ஆசார அனுஷ்டானங் களையும், பேத உணர்ச்சியையும் விட்டுத் திராவிடப் பண்பை ஒப்புக் கொண்டு, அதன்படி நடந்தாலொழிய நாம் அவனைத் திராவிடன் என்று ஒப்புக் கொள்ள மாட்டோம்.
- பெரியார்
(நூல்: ‘மொழியாராய்ச்சி’
வள்ளுவர் பதிப்பகம், பவானி-1948)
No comments:
Post a Comment