தினம் ஒரு ''காசி ஆனந்தன்'' கவிதை

முரண்.. இறைவனின் வாகனம் என்றான் நாயை அவதாரம் என்றான் பன்றியை இறைவனே என்றான் குரங்கை இவனே திட்டினான் என்னை நாயே! பன்றியே! குரங்கே!

Monday, November 30, 2009

தமிழன் சுஜேத்தின் புரச்சிப்படல்கள்


இனியும் பொறுமை இல்லை பகையே எட்டப்போ
இல்லை என்று போனால் இன்றே செத்துப்போ
குட்டக்குனியும் கும்பல் எண்ணம் விட்டுப்போ
வெட்டிக்குடை சாய்க்க முன்னர் தப்பிப்போ
பொறுத்துப் பூமி ஆளும் எண்ணம் இல்லை - பகை
வறுத்துப் பூமி ஆள்வோம் இல்லை இனித் தொல்லை

புரச்சிபாடல்கள் கேட்க கீழ் உல்ல இனைப்பை தொடரவும்.

பெரியாரின் சீர்திருத்தம்


பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள், நாம் இன்று பேசும் நடைமுறைத் தமிழில் சில குறைகளைக் கண்டு அவற்றை நீக்கி, அவற்றை மிக எளிமையாகக் கையாளும் மிகச் சுலபமான வழியைக் காட்டினார். 20 – ஆம் நூற்றாண்டின் இறுதியில் அவர் காட்டிய “தமிழ் எழுத்துச் சீர்திருத்த” நெறியை அனைவரும் ஏற்று நடைமுறைப்படுத்தினர். தமிழக அரசும் இதனை ஏற்று நடைமுறைப்படுத்தியது.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும் மிக்கவர். அவரே தமிழ் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்களை மேற்கொண்டார். அதாவது ணு,று,னு, என்னும் எழுத்துக்களை நெடிலாக மாற்ற துணைக் கால்களைப் புகுத்தினார். “ண+ =ண, ற+ற , ன+ =ன , என மாற்றி எளிதாக்கினார். மேலும் மேல் விலங்குகள் பூட்டப்பட்ட லை,ளை,ணை,னை, போன்ற நான்கு எழுத்துக்களிலிருந்த மேல் விலங்குகளைப் போக்கி அதற்குப் பதிலாக லை, ளை, ணை, னை, ஐகார ஒலி ஒலிக்கும் படி “னை, ஐகார குறியை இணைத்து +ன=னை எனப் புதுமையைப் புகுத்தி மொழி பயில எளிய முறையைக் கையாண்டார் குறிகளின் இன ஒற்றுமையை நிலை நாட்டினர்.

இத்தோடு நிற்காமல் மேலும் சில குறைகளைக் கண்ணுற்று நீக்க முனைந்தார். மேலும் தந்தை பெரியார். “அய்” “அவ்” என்ற “ஐ” ,”ஔ” இரண்டையும் நீக்கும் சிந்தனையில் மூழ்கினார். அவர் விட்ட இடைவெளியிலிருந்து மேலும் முயன்று சீர்காணும் நோக்கோடு அனைவரும் செயல்படுவோம்.

தந்தை பெரியார் அவர்கள் இந்த 20-ஆம் நூற்றாண்டின் இணையற்ற சுய சிந்தனையாளர். நம் தமிழ் மொழி தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகிற்கே பயன்படவேண்டும் எனச் சிந்தித்துச் செயல்பட்டார். தமிழ் எழத்துக்களின் எண்ணிக்கையை 247-லிருந்து கணிசமான எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என ஓங்கிக் குரல்கொடுத்தார். தந்தைபெரியாரின் எழுத்துச் சீர்திருத்தப் பணிகளில் தாமே முன்நின்று வழி நடத்தினார்.

அவர் நமக்கு உணர்த்திச் சென்ற தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை நாம் மேற்கொள்வோம். தமிழ் வரி வடிவங்களின் மாற்றங்களை ஏற்க வேண்டும். தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். தந்தை பெரியார் அவர்கள் எல்லோரும் ஏற்கத் தக்க எளிமையான சில எழுத்துவரி வடிவ மாற்றத்தைக் கண்டு நடைமுறைப்படுத்தினார். அதைத் தொடர்ந்து, எழுத்துச் சீர்திருத்தம் முழு அளவில் நிறைவுடையதாக அமைக்க அனைவர் சிந்தனைகளையும் செயல்பட விடுவோம்.

தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தங்கள் அல்லது 20 -ஆம் நூற்றாண்டின் எழுத்துச் சீர்திருத்தங்கள் எனலாம்.

Sunday, November 29, 2009

ஆபிரகாம் கோவூர்


கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

கேரளாவைச் சேர்ந்த திருவள்ளா என்னும் ஊரில் பிறந்த கோவூர் வண. கோவூர் தொம்மா கத்தனார் என்பவரின் புதல்வர். கொல்கத்தாவில் கல்வி கற்று பின்னர் கேரளாவில் ஆசிரியரானார். தனது இறுதிக் காலத்தை கொழும்பில் கழித்தார். இலங்கையில் பல பாடசாலைகளில் தாவரவியல் ஆசிரியராக பணிபுரிந்து கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியிலிருந்து 1959 இல் இளைப்பாறினார். சிறுநீர்ப்பையில் புற்று நோயால் அவதியுற்றாலும், இறுதிவரை அவர் தீவிர பகுத்தறிவாளராகவே கொள்கை முழக்கம் செய்தார்.
தான் கடவுளின் அவதாரம் அல்லது தெய்வீக ஆற்றல் உள்ள மகான் என்று சொல்லும் அனைவருமே பொய்யர்கள், ஏமாற்றுவாதிகள் என்பதை நிறுவுவதே கோவூரின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. Rationalist Association of Sri Lanka என்னும் சங்கத்தைத் தோற்றுவித்து, வெகு காலம் அதன் தலைவராக இருந்தார், அவரது தொழில் உளவியலாளர், எழுத்தாளர், ஆசிரியர்

Friday, November 27, 2009

கனடா பொலிஸாரால் இயக்குநர் சீமான் கைது


மாவீரர் நாளை முன்னிட்டு கனடா சென்றுள்ள திரைப்பட இயக்குனர் சீமான் ரொறன்ரோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அந்நாட்டு சட்டத்துக்கு புறம்பாக பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டு அந்நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவில் உள்ள ரொறன்ரோவில் மாவீரர் வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய இயக்குனர் சீமான்,

பிரபாகரன் என்ற மாமேதையின் கையில் ஓரு நாடு அல்லது தேசம் இருந்தால் உலகத்தின் வல்லரசாக சில வருடங்களிலேயே வந்துவிடும். பிரபாகரனின் ஆட்சியைப் பார்த்து, தமிழ்நாட்டு அரசை விமர்சிப்பார்கள் என்ற பயம், துணிவான தூய்மையான நீதி, நிர்வாகம், கட்டுக்கோப்பான அரசு என்ற பெருமையை ஈழத்தமிழன் பெற்று விடுவான் என்ற பயம். ஊழல் இல்லாத தமிழீழத்திற்குப் பயந்த ஊழல் மிக்க ஒரு அரசாட்சி, பிரபாகரன் என்ற மாமேதை அழிக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்தது.

பிரபாகரனை நான் அண்ணன் எனக் கூறினால் என்னைப் புலி என்கிறார்கள். பிடி என்கிறார்கள். கற்பழித்தவன், கொலை செய்தவன், எரித்தவன், பள்ளியில் குண்டு போட்டவன் ஒருவரும் பயங்கரவாதிகள் இல்லை. கற்பழிக்காத கொலை செய்யாத, போர்க்கைதிகளைப் பாதுகாத்த புலிகள் இயக்கம் பயங்கரவாதிகள் இயக்கம் எனச் சொல்லுகிற பயங்கரவாதத்தை என்னென்று கூறுவது.

ஈழத்தமிழனுக்கு ஏற்ற ஒரு அரசாட்சி எம்.ஜீ.ஆர். அவர்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் வரவே இல்லை. விடியலுக்குப் போராடிய விடுதலைப் புலிகள் எதிரியோடு போராடியிருந்தால் இந்நேரம் வென்றிருப்பார்கள். ஆனால், ஊழல் நிரம்பிய தமிழ் எதிரிகளோடும் அவர்கள் போராட வேண்டியிருந்தது. ஆனால், இந்த வரலாறு தமிழனுக்குத் தோல்வி இல்லை. துடித்து எழும். தமிழீழத் தேசம் பிறக்கும் என்றார்.

Thursday, November 26, 2009

தலைவர் வே.பிரபாகரன் எழுதிய கவிதை!


நாம் அணிவகுத்துள்ளோம்...
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
நாம் அணிவகுத்துள்ளோம்
இழந்த எமது நாட்டை மீட்க

எதிரி நமது நாட்டை
வஞ்சகமாக அபகரித்துவிட்டான்!
அதைக் கண்டு நாம் அஞ்சவில்லை!

புயலெனச் சீறி
இழந்த நாட்டை மீட்க
நாம் அணிவகுத்துள்ளோம்
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!

எமது படையணி கடக்க வேண்டியது
நெருப்பாறென்பது எமக்குத் தெரியும்
ஆனால்...
அதைத் தாங்கக் கூடிய
மக்கள் ஆதரவென்னும்
கவசம் எம்மிடம் உண்டு!

எதிரியின் ஆயுதமோ பலம் பொருந்தியது!
எமது
ஆத்ம பலமோ அதைவிட
வலிமை வாய்ந்தது!
எதிரியின் குண்டுகள் வெடிக்கும்...
ஆனால்
எமது விடுதலை நெஞ்சங்கள்
எரிமலையென வெடிக்கும் சத்தத்தில்
அதன் சத்தம் அமுங்கிவிடும்!

நாம் அணிவகுத்துள்ளோம்...
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
எமது அணிவகுப்பு
எமது தமிழ்ஈழ மக்களிடையே
அணிவகுத்துச் செல்கிறது!

நாம் செல்லும் இடமெல்லாம்...
எமது எதிரிகள் அஞ்சி ஓடுகிறார்கள்!
மக்களிடத்தில் உள்ள
பிரதேசம் சாதி
மதமென்னும் பேய்களும்
அலறி ஓடுகின்றன...

எமது படையணி விரைகிறது...
எம தேசத்தை மீட்க!

நாம் செல்லும் இடமெல்லாம்...
காடுகள் கழனிகள் ஆகின்றன!
வெட்டிப் பேச்சு வீரர்கள்
மிரண்டோடுகின்றனர்...!

உழைப்போர் முகங்களில்
உவகை தெரிகிறது
ஏழைகள் முகங்களில்
புன்னகை உதயமாகிறது.

*1981-ஆம் ஆண்டில் தமிழீழ தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள் எழுதிய கவிதையை மாவீரர் தினமான இன்று நினைவு கூறுகிறோம்.

மாவீரர் நாள் பொதுக்கூட்டங்கள் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

உலெகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் நவம்பர் 27‐ஆம் நாளை ஈழப்போரில் உயிர் நீத்த போராளிகளின் நினைவாக மாவீரதினமாக கொண்டாடி வருகின்றனர். மே மாதப் போரின் முடிவுக்கு பின்னர் பிரபாகரன் தொடர்பான சர்ச்சைகளுக்கிடையே தமிழகத்தில் இந்த வருடம் மாவீரர் தினம் பெருமளவில் கொண்டாடப்படுகிறது.


பல்வேறு அமைப்புகளின் பிரதான ஈழ ஆதரவுக் கட்சிகளும் இவ்விழாவைக் கொண்டாடுவதில் ஆர்வம் காட்டுகின்றன. சென்னை நகரம் முழுக்க போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல் வேறு இடங்களிலும் மாவீரர் நாள் விழாக்களை கொண்டாட போலீசார் பல் வேறு தடைகளை விதித்திருந்தனர். இது தொடர்பாக நெடுமாறனும் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் சென்னை கே.கே.நகர் அருகில் உள்ள எம்.ஜி.ஆர்.நகரில் தமிழ் மாணவர் பேரவை இளைஞர் பேரவை அமைப்பினர் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி மாநகர போலீசில் விண்ணப்பித்தனர். ஆனால் இதற்கு போலீசார்அனுமதி மறுத்தனர். அரசியல் சாசனம் அளித்துள்ள பேச்சுரிமையை போலீசார் மறுப்பதாகக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மாணவர் பேரவை தமிழ் இளைஞர்பேரவை பொறுப்பாளர் பாலகுரு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்று விசாரணை செய்த நீதிபதி சுகுணா மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறையினர் அனுமதி அளிக்க வேண்டும், இதற்காக மீண்டும் ஒருமுறை காவல்துறையினருக்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு தமிழ் மாணவர் பேரவை அமைப்பினர் மனு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

நீதிமன்றம் இப்படியான உத்தரவிட்டிருப்பது தமீழீழ ஆதரவாளர்களிடையே பெரும் உற்சாகத்தை தோற்று வித்திருக்கிறது. தமிழகமெங்கிலும் இந்த நீதிமன்ற ஆணையைக் காட்டியே அவர்கள் போலீசின் தடையை எதிர் கொள்ள முடியும் என்கிறார்கள். சிலர் சரி என்னதான் செய்கிறார்கள் பார்ப்போமே.

மாவீரர் நாள் 2009





கனேடிய தமிழ் இளையோர் ஒன்றிணைந்து வழங்கிய மாவீரர் நாள் 2009 தொடக்க நிகழ்வு

கனேடிய பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்கள் ஒன்றிணைந்து நடாத்திய மாவீரர் நாள் 2009, தமிழ் இளையோர் மாவீரர்பால் கொண்டிருக்கும் மரியாதையையும் அவர்களின் வழி நின்று ஒன்றிணைந்து ஓர்மத்துடன் ஈழம் வெல்ல நிற்பதை காட்டிய நிகழ்ச்சியாக அமைந்தது.

அனைத்து மாணவர்களும் அமைப்புக்களும் கனேடியத் தமிழ் இளையோர் அமைப்புடன் இணைந்து மண்டபம் நிறைந்த அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வு கனேடியத் தமிழ் இளையோரின் ஒற்றுமையை, ஒற்றுமையின் மூலம் பலம் என்ற கூற்றை எடுத்துக்காட்டுவதாக இருந்தது.

முறையே, கொடியேற்றல், ஈகைச்சுடரேற்றல், அகவணக்கம், மலர்வணக்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து மாவீரரது தியாகங்களை, அவர்களது வாழ்க்கையை, மற்றும் தமிழ்ர்களது வீர வரலாற்றை எடுத்துக்காட்டும் மாணவர்களது நிகழ்ச்சிகள் மேடையேறின. மேலும், கவிதைகள், மாணவர் மன்றத் தலைவர்களது பேச்சுக்கள், நாட்டிய நாடகங்கள், உண்மைச் சம்பவங்களின் மீள்வாக்கங்கள் போன்றவையும் மேடையில் காட்சிப்படுத்தப்பட்டன.

நிகழ்ச்சியின் இறுதியில் தமிழின உணர்வாளர் சீமான் அண்ணாவின் உரையாற்றினார். இலங்கை அரசின் அட்டூழியங்களையும், அவற்றை எதிர்த்து நின்ற தேசியத் தலைவர் அவர்களையும் வியந்துரைத்த சீமான் அண்ணா, எதிர்வரும் காலங்களில், இளையோர் ஆகிய நாம் ஒன்றுபட்டு நின்று தமிழீழத்தை ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கவேண்டிய முக்கியத்துவம் பற்றியும் விளக்கினார்.

தனியே இளையோரினால் ஏற்பாடு செய்யப்பட்டு, இளையோரினால் ஒழுங்கமைக்கப்பட்டு, அவர்களினாலேயே உலகெங்கும் 25,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களுக்கு இணையம் மூலம் இவ்வெழுச்சி நிகழ்வு நேரடி அஞ்சல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்!

Wednesday, November 18, 2009

நான் உரைப்பவைகளை ஆராய்ந்து பாருங்கள்!



நான் சொல்வன எல்லாம் எனது சொந்த அபிப்பிராயங்கள்தாம் என்று சொல்வதோடு, நான் ஒரு சாதாரண மனிதன்தான். நான் எவ்விதத் தன்மையும் பொருந்திய ஒரு தீர்க்கதரிசியல்லன். ஆகையால், தனி மனிதன் என்கின்ற முறையில்தான் என்னுடைய அபிப்பிராயங்களையும் நான் பார்த்தும் ஆராய்ச்சி செய்தும் அனுபவத்தில் அறிந்ததுமானவைகளைத்தான் அதிலும் எனக்குச் சரி என்று பட்டதைத்தான் உரைக்கின்றேன்.

ஒரு பெரியார் உரைத்துவிட்டார் என நீங்கள் கருதி அப்படியே அவைகளைக் கேட்டு நம்பிவிடுவீர்களானால், அப்பொழுது நீங்கள் யாவரும் அடிமைகளே! நான் உரைப்பதை நீங்கள் நம்பாவிட்டால், பாவம் என்றாவது, தோஷம் என்றாவது அல்லது நரகத்துக்குத்தான் போவீர்கள் என்றாவது சொல்லிப் பயமுறுத்தவில்லை. யார் உரைப்பதையும் நாம் கேட்டு, வேத வாக்கு என அப்படியே நம்பிவிட்டதனால்தான் நாம் இன்று அடிமைகளாக இருக்கின்றோம்.

ஆகவே, நான் உரைப்பவைகளை ஆராய்ந்து பாருங்கள்! உங்களுக்கு அவைகள் உண்மையென்று தோன்றினால் அவைகளை ஒப்புக் கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் தள்ளி விடுங்கள். உண்மையெனப் புலப்படுமாகில், அவைகளை உண்மையென ஒப்புக் கொள்வ-தில் மட்டும் பிரயோசனம் இல்லை; அவைகளை அனுஷ்டானத்தில் கொண்டு வந்து அதன்படி நடக்க முயற்சியுங்கள். எனது சொநத் அனுபவங்களை நானறிந்து உங்களுக்கு உரைப்பதுதான் என்னுடைய விடுதலை. அவைகளை ஆராய்ந்து அறிவது, அதன்படி நடப்பதுதான் உங்கள் விடுதலை.

(விடுதலை, கட்டுரை 8.10.1951)

தமிழ் - மொழிப் பெயர் : திராவிடர் - இனப் பெயர்


தமிழர் என்பது மொழிப் பெயர். திராவிடர் என்பது இனப் பெயர். தமிழ் பேசும் மக்கள் யாவரும் தமிழர் என்று தலைப்பில் கூட முடியும். ஆனால், தமிழ் பேசும் அத்தனை பேரும் திராவிடர் ஆகிவிட முடியாது. இனத்தால் திராவிடனான ஒருவன் எந்தச் சமயத்தை சார்ந்த வனாயிருந்தாலும், எந்த மொழி பேசுபவனா யிருந்தாலும் அவன் திராவிடர் என்ற தலைப்பில் தான் சேருவான்.

ஆகையால், திராவிட மொழி தமிழ் என்ற காரணத்திற்காக, தமிழ் பேசும் திராவிடன் அல்லாத ஒருவன் - மொழி காரணமாக மட்டுமே தன்னைத் திராவிடன் என்று கூறிக் கொள்ள முடியாது.

தமிழர்என்றால் பார்ப்பானும் தன்னைத் தமிழன் என்று கூறிக் கொண்டு நம்முடன் கலந்து கொண்டு மேலும் நம்மைக் கெடுக்கப் பார்ப்பான். திராவிடர் என்றால் எந்தப் பார்ப்பானும் தன்னைத் திராவிடன் என்று கூறிக் கொண்டு நம்முடன் சேர முற்பட மாட்டான். அப்படி முன் வந்தாலும் அவனுடைய ஆசார அனுஷ்டானங் களையும், பேத உணர்ச்சியையும் விட்டுத் திராவிடப் பண்பை ஒப்புக் கொண்டு, அதன்படி நடந்தாலொழிய நாம் அவனைத் திராவிடன் என்று ஒப்புக் கொள்ள மாட்டோம்.

- பெரியார்

(நூல்: மொழியாராய்ச்சி

வள்ளுவர் பதிப்பகம், பவானி-1948)

தந்தை பெரியாரின் கானொளி

தமிழர்களுக்காக தியாக தீபங்களை நவ. 27ம் நாள் ஏற்றுவீர்


ஈழத்தில் மறைந்த தமிழர்களுக்காக தியாக தீபங்களை எதிர்வரும் 27ம் நாள் ஏற்றுவீர் என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பழ.நெடுமாறன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இலங்கையில் நடைபெற்றபோரில் சிங்களப்படையால் படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழர்களுக்கும், போராளிகளுக்கும் மற்றும் தமிழ்நாட்டிலும் உலக நாடுகளிலும் ஈழத்தமிழர்களுக்காகத் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்த முத்துக்குமார் உள்ளிட்ட 18 தமிழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் வருகிற நவம்பர் 27ஆம் தேதியன்று தமிழகமெங்கும் அமைதி ஊர்வலங்களையும், அஞ்சலிக் கூட்டங்களையும் நடத்துமாறு அனைத்துத் தமிழர்களையும் வேண்டிக் கொள்கிறேன். அன்றிரவு தமிழர் வீடுகளில் தியாகத் தீபங்கள் ஏற்றி மறைந்தவர்களின் நினைவைப் போற்றுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

( பழ. நெடுமாறன் )
ஒருங்கிணைப்பாளர்
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்

பெரியார் பக்தி




ஒருநாள் காலையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தன்னுடைய வீட்டில் அமர்ந்து, பழைய சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த அவரது நண்பரும்... முன்னாள் அமைச்சருமான என்.வி.நடராசன், ``என்னங்க... மதுரம் உங்களுக்கு டிபன் எதுவும் செய்து தரலையா..? பழைய சோறு சாப்பிடுறீங்க..!''

கலைவாணர் எதுவும் பேசாமால், வேலைக்காரரைக் கூப்பிட்டு, ``இந்தா... இந்த ஒரு ரூபாய்க்கு... பழைய சோறு வாங்கிட்டு வா...'' என்றார். ரொம்ப நேரம் கழித்து வந்த வேலைக்காரர், ``ஐயா... நானும் எங்கெங்கோ அலைஞ்சிட்டேன். ஒரு இடத்திலேயும் பழைய சோறு கிடைக்கல..'' என்றார்.

``கேட்டீங்களா நடராசன்... எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காத அற்புதப் பொருள்... அதனால்தான் இதை சாப்பிட்டேன்!'' என்று கலைவாணர் சொன்னதைக் கேட்டு நடராசன் மட்டுமின்றி... மதுரமும் அசந்துவிட்டார்.

பெரியார் பக்தி

1947 - ஆகஸ்ட் 15 முதல் சுதந் திர நாள் என்பதற்காக கலை வாணரை சென்னை- வானொலி நிலையம் அழைத்திருந்தது. நிகழ்ச்சி சம்பந்தப்பட்டவற்றை வானொலிக்கு முன்னதாகவே எழுதிக் கொடுத்துவிட்டார் என்.எஸ்.கே. நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவர்களின் வரிசையில் தந்தை பெரியார் பெயரும் இடம்பெற்றிருந்தது. வானொலி நிலையத்தார் அதனை நீக்கி விட்டனர். (எல்லாம் `அவாள் ஆயிற்றே!).

கலைவாணருக்கோ வந்ததே சினம்! பெரியார் பெயர் இடம் பெறாவிட்டால், என் நிகழ்ச்சியும் இடம்பெறாது என்று கூறிவிட்டு வெளியேறிவிட்டார். இதனைச் சற்றும் எதிர்பாராத வானொலி நிறுவனத்தார் மறுபடியும் பெரியார் பெயரையும் இணைத்து நிகழ்ச் சியை நடத்திட ஏற்பாடு செய்தனர்.

Sunday, November 15, 2009

பெரியாரின் ஊழல்





பெரியார் ஈ.வெ.ரா காங்கிரசில் இருந்தபோது பெரிய அளவில் ஊழல் செய்துபெரும் பணத்துடன் கட்சியில் இருந்து கம்பி நீட்டிவிட்டார் என்றுசொல்கிறார்களே, உண்மையா?

-முகமது இலியாஸ்

இதே கேள்வியை பெரியாரிடம் கேட்டபோது,

காங்கரசில் சத்தியமூர்த்தி, ராஜாஜி போன்ற பெரியவர்கள் எல்லாம்இருக்கும்போது அவர்களை மீறி நான் பணத்தை திருடி கொண்டு வருவதுநடக்கிற காரியமா?” என்று பதில் சொல்லியிருக்கிறார்.

காந்தியை கொன்ற கோட்சே என்கிற பார்ப்பான், கொலை பழி இஸ்லாமியர்கள்மீது வர வேண்டும் என்பதற்காக கொலை செய்வதற்கு முன் சுன்னத் செய்துகொண்டு இஸ்லாமிய அடையாளத்தோடு காந்தியை கொன்றானே, அதேமுறையை பின்பற்றிமுகமது இலியாஸ்என்கிற பெயருக்குப் பின்னால்ஒளிந்திருக்கிற அம்பி, ஆதரமற்று தன் மீது அவதூறாக கேட்கப்பட்ட கேள்விக்குதன் பாணியில் பெரியார் சொன்ன பதில் அது.

உங்கள் கேள்விக்கு என் பாணியில் ஒரு எதிர் கேள்வி கேட்கவா?

நீங்கள் 10 பெண்களை வைத்துக் கொண்டு வீட்டிலேயே விபச்சாரம் செய்வதாக சொல்கிறார்களே உண்மையா?

Tuesday, November 10, 2009

இரத்ததானம்


சிவகங்கை அரசுமருத்துவமனையில் 10-11-2009 அன்று இரத்ததானம் செய்யும் போது எடுத்த படம்
சிவகங்கை சிறுவர் பார்வையற்றோர் பள்ளிக்கு உணவு வழங்கிய அன்று எடுத்த படம்,

தமிழா திருந்து

எங்கள் நாட்டில்
எல்லா திசைகளில் இருந்தும்
கடல், அலைகளை
அள்ளி வருகிறது-ஆனால்
தென் திசை கடல்
மட்டும் அகதிகளை
அள்ளி வருகிறது.
பஞ்சாபிலிருந்து வந்தால்
"பஞ்சாபி"
ராஜஸ்தானிலிருந்து வந்தால்
"ராஜஸ்தானி"
கேரளத்திலிருந்து வந்தால்
"மலையாளி"
பாகிஸ்தானில் இருந்து வந்தால் கூட
அவன் "பாகிஸ்தானி"
ஈழத்திலிருந்து வந்தால் மட்டும்
ஏனடா "அகதி" .
தமிழா திருந்து!

தமிழ் ஈழம் மட்டுமே
இந்த வலிகளுக்கெல்லாம்
மருந்து!!!!!
உடல் இருபதோ தமிழகத்தில், உள்ளம் இருபதோ ஈழத்தில்........

Saturday, November 7, 2009

உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன் தன்னம்பிக்கை கவிதைகள்.

முரண்..
இறைவனின் வாகனம் என்றான் நாயை
அவதாரம் என்றான் பன்றியை
இறைவனே என்றான் குரங்கை
இவனே திட்டினான் என்னை
நாயே! பன்றியே! குரங்கே!

நாற்காலி..
இங்கே வேறுபாடு அதிகம் இல்லை
நாற்காலிக்கும் கட்டிலுக்கும்.
வீடு தூங்க கட்டில்
நாடு தூங்க நாற்காலி

ஞானம்..
ஞானம் பெற்றது
நீ-உன்மண்ணில் பள்ளிக் கூடங்கள்
கட்டப்பட்டதால் நான்-என் மண்ணில்
பள்ளிக்கூடங்கள் இடிக்கப்பட்டதால்.

பாடம்..
புரட்சியாவது வெங்காயமாவது
என்கிறாய்
தெரிந்து பேசு
காயப்படுத்தியவனின் கண்ணீரை
வாங்கும் வெஙகாயம்.
சென்னிரை வாங்கும் புரட்சி

கோயில்..
செருப்புகளை வெளியே விட்டு
உள்ளே போகிறது அழுக்கு.

தளை..
கணவனிடம் ஓப்புதல் கேட்கிறாள்
பெண்கள் விடுதலை அமைப்பில்சேர.

வில்..
வீழ்ந்த தமிழன் கதையை
விம்மி விம்மி பாடிக்கொண்டிருக்கிறது
மேடையில்-
வெட்கம் கெட்ட வில்

பெண்மை..
தெரிவது உனக்கு அவள் கண்களில்
வண்டும் மீனும் பூவும்
தெரிவதில்லை கண்ணீர்

வெறி..
எரியவில்லை அடுப்பு சேரியில்.
போராடினோம்…
எரிந்ததுஅடுப்பல்ல-சேரி

வீரம்..
உன் கனவில் பாம்பு துரத்துகிறது
நீ ஓடுகிறாய்
குறவன் அவன் துரத்துகிறான்
பாம்பு ஓடுகிறது
வீரம் தொழிலாளிக்கு .

சாமி..
எங்கள் குடிசையில்
அடிக்கடி சாமி ஆடுவாள்
அம்மா ஏனோ தெரியவில்லை
அன்றும் இன்றும்
குடிசைக்கே வருகிறது சாமி
மாடிக்கே போகிறது வரம்.

நிழல்..
எதிரிகளால் அழிக்கப்பட்டன எங்கள் காடுகள்
நிமிர்ந்தோம்
இன்று-போராளிகளின் நிழலில் மரங்கள்
மாவீரன்..இது உயிருக்கு வந்த சாவு அல்ல
சாவுக்கு வந்த உயிர்;

போர்..
ஊரில் உங்கள் சுடுகாடு.
சுடுகாட்டில் எங்கள் ஊர்.

உறுத்தல்..
இரவெல்லாம் விழித்திருந்து
எங்களுர் ஆச்சி இழைத்தபனைபபாய்…
வாங்கினேன் உறங்குவது எப்படி
இவள் பாயில்?

மனிதன்..
இவன் பசுவின் பாலைக்கறந்தால்
பசு பால் தரும் என்கிறான்.
காகம் இவன் வடையை எடுத்தால்
காகம் வடையை திருடிற்று என்கிறான்
இப்படியாக மனிதன்….

மானம்..
உன் கோவணம் அவிழ்க்கப்பட்டதா?
அவன் கைகளை வெட்டு
கெஞ்சி கோவணம் கட்டாதே
அம்மணமாகவே போராடு.

அறுவடை..
திரைப்படச்சுவரொட்டியை
தின்றகழுதை கொழுத்தது
பார்த்த கழுதை புழுத்தது

மந்தை..
மேடை
தமிழா!
ஆடாய் மாடாய்
ஆனாயடா…
நீ என்றேன்
கைதட்டினான்

பெண்..
ஏடுகளில் முன்பக்கத்தின்
அட்டையில்
வீடுகளில் பின்பக்கத்தில்
அடுப்பங்கரையில்.

கோடை..
தங்க வளையலைக்கழற்றி
போராளியிடம் தந்தாள்
செலவுக்குவைத்துக்கொள்
உங்களில் பலருக்கு
கைகளே இல்லை
எனக்கு எதுக்கு வளையல்.

திமிர்..
வேலைக்காரன்மேல் பாய்ந்தார்
நாயே பீட்டரை கவனித்தாயா?
இவர் வீட்டில் பீட்டர் என்றால் நாய்
நாய் என்றால் மனிதன்

கொலை..
ஒரு நாள் வாழ்க்கை பூவுக்கு…
விரியுமுன்பே பறித்து
இனறவனுக்கு அர்ச்சனை
செய்கிறான்
நூறாண்டு வாழ்ககை வேண்டி தனக்கு

அடக்கம்..
அடக்கம் செய்யப்படுகிறோம்…
இரண்டு பெட்டிகளில்.
சவப்பொட்டியிலும்
தொலைக்காட்சிப் பெட்டியிலும்

உலகமைதி..
மாந்த நேயம் பேசின அணுகுண்டுகள்
புறாக்களை பறக்கவிட்டன கழுகுகள்.
போராடிக்கொண்டிருக்கிறது அமைதி.

அடி ..
கலையை கலைஞனை
போற்றிய நாடிது என்கிறாய்…
காலம் காலமாய்
பறையை பறயனை தாழ்த்திய நீ.

ஆணாதிக்கம்..
எப்படியும் இருக்கலாம்
ஆணிண் திமிர்
திரௌபதைக்கு கணவன் ஐந்தாகவும்
அர்ச்சுனனுக்கு மனைவி ஐந்தாகவும்

வேலி..
மயில் இறகு புலித்தோல்
மான் கொம்பு யானைத்தந்தம்
அழகாய் இருக்கிறது எங்கள் வீடு.
வனவிலங்குகள் காப்பாளர் அப்பா

காலம்..
உன் கையிலா கடிகாரம்?
கடிகாரத்தின் கையில் நீ.

கடற்கரை..
உடல் நலம் தேடி
காற்றுவாங்க வந்து போகும்
பெரியஇடத்து மாடிகள்
இங்கேயே நோயோடும் நொடியோடும்
ஒடுங் கிடக்கும் மீனவர் குடிசைகள்

நிலவு..
புராணமாய் இறைவனின் தலையில்
வரலாறாய் மனிதனின் காலில்.

இருள்..
பகலிலும் தலைவர்கள் குத்துவிளக்கு ஏற்ற
நிகழ்ந்தன விழாக்கள்.தேடுகிறோம்…
எங்கேவெளிச்சம்?

தாஜ்மஹால்..
காதலி புதைக்கப்படட இடம் காட்டுகிறாய்
காதலை புதைத்த இடம் காட்டு
எங்கே ஷாஜஹானால் கசக்கி எறியப்பட்ட
அந்தப்புரப்பெண்களின் கறுப்புகல்லறைகள்?

புலமை..
கண்ணீர் சிந்துகிறோம் கண்ணீருக்காக
இவன் உவமைகளும்…முத்துக்கள்
என்றானே கண்ணீரை!

பால்..
என்னைத் தெய்வம் ஆக்கினாய்
சிவன்பாதி சக்திபாதி என்றாய் ஏமாற்றாதே-
உன்பால் வேறுபாடு அழுத்தமானது
சிவனுக்கு பசுப்பாலும் சக்திக்குகள்ளிபாலும்

அரண்..
என் வலகையில் ஐந்துவிரல்கள்
உண்ணவும் வணங்கவும் மட்டுமல்ல
அறையவும்தான்.

தேர்தல்..
மாலை வளையல் ழூக்குத்தி
பென்னான எதுகும் இல்லை
எங்கள் குடிசையில்.
அவன் செல்கிறான்
இருக்கிறதாம் எங்களிடம்…
பொன்னான வாக்குகள்

இனவெறி..
மாடுகள் காணாமல்போகும் என்று
தோலில் குறிபோடும் எங்கள் மண்
கொஞ்சநாளாய்…
மனிதர்களையே காணவில்லையே.

குப்பைத்தொட்டி..
அலுவலகத்தில் இருக்கிறவனுக்
இது குப்பைத்தொட்டி
குப்பை பொறுக்கி வாழ்கிறவனுக்கு
இதுஅலுவலகம்.

ஏழ்மை..
சதை பிடித்து விடுகிறாள்
அழகு நிலையத்தில்
எலும்புக்கைகளால்

கண்ணோட்டம்..
செருப்பைப்பார்கையில் நீங்கள்
அணிந்திருக்கிறவனின்
காலைப்பார்க்கிறீர்கள்.
நான் செய்தவனின்
கையைப்பார்க்கிறேன்

நிமிர்வு..
தேவை பயில்வன்களல்ல வீரர்கள்
உன் உடலின் கூனல்பற்றிய கவலைவிடு
வில்லில் இல்லாத நிமிர்வா?

கூண்டு..
விடுதலை ஆவாரா சிறையில்
இருந்து என்கணவர்?
சோதிடம கேட்கிறாள்
கூண்டுக்கிளியிடம்

மண்..
என்னை என் மண்ணில்
புதைத்தாய் பகைவனே!
என் மண்ணை
எங்கே புதைப்பாய்?

குடுகுடு..
நல்லகாலம் வருகுது
நல்லகாலம் வருகுது..
தெருவிலேயே நிற்கிறான்
குடுகுடுப்பைக்காரன்.


இன்னொறு இடுகை

Related Posts with Thumbnails