கனேடிய தமிழ் இளையோர் ஒன்றிணைந்து வழங்கிய மாவீரர் நாள் 2009 தொடக்க நிகழ்வு
கனேடிய பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்கள் ஒன்றிணைந்து நடாத்திய மாவீரர் நாள் 2009, தமிழ் இளையோர் மாவீரர்பால் கொண்டிருக்கும் மரியாதையையும் அவர்களின் வழி நின்று ஒன்றிணைந்து ஓர்மத்துடன் ஈழம் வெல்ல நிற்பதை காட்டிய நிகழ்ச்சியாக அமைந்தது.
அனைத்து மாணவர்களும் அமைப்புக்களும் கனேடியத் தமிழ் இளையோர் அமைப்புடன் இணைந்து மண்டபம் நிறைந்த அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வு கனேடியத் தமிழ் இளையோரின் ஒற்றுமையை, ஒற்றுமையின் மூலம் பலம் என்ற கூற்றை எடுத்துக்காட்டுவதாக இருந்தது.
முறையே, கொடியேற்றல், ஈகைச்சுடரேற்றல், அகவணக்கம், மலர்வணக்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து மாவீரரது தியாகங்களை, அவர்களது வாழ்க்கையை, மற்றும் தமிழ்ர்களது வீர வரலாற்றை எடுத்துக்காட்டும் மாணவர்களது நிகழ்ச்சிகள் மேடையேறின. மேலும், கவிதைகள், மாணவர் மன்றத் தலைவர்களது பேச்சுக்கள், நாட்டிய நாடகங்கள், உண்மைச் சம்பவங்களின் மீள்வாக்கங்கள் போன்றவையும் மேடையில் காட்சிப்படுத்தப்பட்டன.
நிகழ்ச்சியின் இறுதியில் தமிழின உணர்வாளர் சீமான் அண்ணாவின் உரையாற்றினார். இலங்கை அரசின் அட்டூழியங்களையும், அவற்றை எதிர்த்து நின்ற தேசியத் தலைவர் அவர்களையும் வியந்துரைத்த சீமான் அண்ணா, எதிர்வரும் காலங்களில், இளையோர் ஆகிய நாம் ஒன்றுபட்டு நின்று தமிழீழத்தை ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கவேண்டிய முக்கியத்துவம் பற்றியும் விளக்கினார்.
தனியே இளையோரினால் ஏற்பாடு செய்யப்பட்டு, இளையோரினால் ஒழுங்கமைக்கப்பட்டு, அவர்களினாலேயே உலகெங்கும் 25,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களுக்கு இணையம் மூலம் இவ்வெழுச்சி நிகழ்வு நேரடி அஞ்சல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்!
No comments:
Post a Comment