தினம் ஒரு ''காசி ஆனந்தன்'' கவிதை

முரண்.. இறைவனின் வாகனம் என்றான் நாயை அவதாரம் என்றான் பன்றியை இறைவனே என்றான் குரங்கை இவனே திட்டினான் என்னை நாயே! பன்றியே! குரங்கே!

Friday, December 18, 2009

புவி வெப்பமடைவதை தடுக்க சில வழிகள்

கோபன்ஹேகன்:டென்மார்க் புவி வெப்ப தடுப்பு மாநாட்டில் கொண்டுவரப்படும் தீர்மானங்கள் குறித்து முடிவு ஏற்படாமல், முட்டுக்கட்டை நிலை ஏற்பட்டிருக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசனை மேற்கொள்ளும் சமயத்தில் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில், புவி வெப்ப தடுப்பு மாநாடு கடந்த வாரம் துவங்கியது.


192 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங்கும், அதிபர் ஒபாமாவும் இந்த மாநாட்டில் நாளை பங்கேற்கின்றனர். தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் வெப்பவாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்து வது குறித்த கியோட்டோ மாநாட்டு தீர்மானத்தை பின்பற்றுவதில் பல்வேறு நாடுகளுக்கிடையே முரண்பாடு நிலவுகிறது.


சில நாடுகள் இந்த தீர்மானத்தை திருத்த வேண்டும் என கோருகின்றன. "இந்த தீர்மானத்தை திருத்தக் கூடாது' என, இந்தியா உள்ளிட்ட நாடுகள் வற்புறுத்துகின்றன. இந்தியா, சீனா, தென்னாப்ரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அணிக்கு அந்தந்த நாடுகளின் முதலெழுத்தைக் கொண்டு அமைக்கப் பட்ட, "பேசிக்' என்ற ஆங்கில வார்த் தையைக் கொண்ட அமைப்பு தெளிவாக சில கருத்துக்களை முன் வைத்தது.

அதில், "கோபன்ஹேகன் மாநாட்டில் நியாயமான, யாரையும் பாதிக்காத முடிவை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தப்பட்டது. இந்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "முடிவு எடுக்க முடியாமல் குளறுபடி ஏதேனும் ஏற்பட்டால், அதற்கு "பேசிக்' அமைப்பை குறை கூறக்கூடாது ' என்றார்.

மேலும் இதுவரை நடந்த பேச்சுக்களில் முடிவு ஏதும் எட்டப் படவில்லை என்பதற்கு அறிகுறியாக, ஐ.நா., பருவநிலை மாநாட்டுத் தலைவரும் டேனிஷ் அதிபருமான கோனி ஹெடிகார்டு, இப்பேச்சுக் களின் தலைமைப் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக இனி டென்மார்க் பிரதமர் ராஸ்முசேன் இனிப் பணியாற்றுவார் என்று கூறப்பட்டது.

ஆனால், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் வெப்ப வாயுக்களை கட்டுப்படுத்த வளர்ந்த நாடுகள் நிதி உதவி செய்ய வேண்டும் என்பது போன்ற இந்தியாவின் கோரிக்கைகள், மாநாட்டின் வரைவு தீர்மானத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

No comments:

இன்னொறு இடுகை

Related Posts with Thumbnails