தினம் ஒரு ''காசி ஆனந்தன்'' கவிதை

முரண்.. இறைவனின் வாகனம் என்றான் நாயை அவதாரம் என்றான் பன்றியை இறைவனே என்றான் குரங்கை இவனே திட்டினான் என்னை நாயே! பன்றியே! குரங்கே!

Sunday, December 6, 2009

இரக்கமில்லாத குண்டுவிமானமே..!

தும்மலுக்கு மருந்தெடுக்க
போனவன் குண்டுமழையில்
நனைந்தபடி வீடு வந்து
சேர்ந்தான் பிணமாக

*

கொள்ளிவைக்க யாரும்
மிஞ்சவில்லை ஒரே
குண்டில் குடும்பமே பலி

*

குழந்தையில் வீட்டில் ஊர்ந்து பழகியது
உதவி செய்கிறது குண்டுவிமானம்
வருகையில் தெருக்களில் ஊர

*

பத்து மாதம் சுமந்தவளும்
இறந்து போகிறாள் பதினைந்து
நிமிடம் சுமக்க முடியாத விமானத்தின்
குண்டுகளால்

*

எனக்கும் யோதிடம் தெரியும்
என் சாவும் குண்டுகளால்தான்
எந்த குண்டால் என்பதைத்தான்
கணிக்கமுடியவில்லை

*

குண்டுகளை தயாரிப்பவர்களே
நீங்கள் அக்கா,அண்ணா,தம்பி,
தங்கையோடு பிறந்ததில்லையா…?

-யாழ்_அகத்தியன்

No comments:

இன்னொறு இடுகை

Related Posts with Thumbnails