வாஷிங்டன்: சிகரெட் புகைப்பவர்கள் வழக்கமான நிகோட்டினுடன், நச்சுக் கிருமிகளையும் (பாக்டீரியாக்கள்) உயிரோடு இழுத்து உடம்புக்குள் விட்டுக்கொள்கிறார்கள் அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர். புகை பிடிக்கும் போது சிகரெட்டில் இருந்து உடம்புக்குள் செல்லும் ரசாயணங்கள் மற்றும் வாயுக்களால் என்னென்ன பாதிப்பு என்ற ரீதியில் தான் விஞ்ஞானிகள் ஆராய்ந்து அச்சுறுத்திக் கொண்டிருந்தார்கள். இப்போது, நிகோடினுக்கு இணையாக நுரையீரல் மற்றும் சுவாச உறுப்புகளை நேரடியாக பாதிக்கும் பாக்டீரியா கிருமிகளை மேரிலாண்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர். மனிதர்களிடம் எளிதில் தொற்றிக்கொள்ளும் அபாயக் கிருமிகள் உட்பட நூற்றுக்கணக்கான விதங்களில் கிருமிகள் சிகரெட்டுகளில் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். புகை பிடிப்பவர்களுக்கு ஏற்படும் நோய்களுக்கான காரணங்களில் இவையும் முக்கிய பங்காளிகள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment