தினம் ஒரு ''காசி ஆனந்தன்'' கவிதை

முரண்.. இறைவனின் வாகனம் என்றான் நாயை அவதாரம் என்றான் பன்றியை இறைவனே என்றான் குரங்கை இவனே திட்டினான் என்னை நாயே! பன்றியே! குரங்கே!

Sunday, December 6, 2009

தமிழுக்கு நான் ஏழை…!


எனக்குத் தெரியாத
தமிழ்மீதான என் கோபம்
இன்னும் குறையவில்லை

ஏனெனில்
எப்பொழுதெல்லாம்
அதை தெரிந்த
கொள்ள் நினைக்கிறேனோ

அப்பொழுதெல்லாம்
தனி அறைகளில்
சில
கவியரசுகளிடம் மட்டும்
மனம்விட்டு
பேசிக் கொண்டிருக்கும்

தமிழே நீயும்
வசதியானவர்களின்
வர்க்கம்தான்

அதனால்தான்
என்னைப் போண்ற
ஏழைக் கிறுக்கன்களை

உன் கண்களுக்கு
தெரிவதே இல்லை
-யாழ்_அகத்தியன்

No comments:

இன்னொறு இடுகை

Related Posts with Thumbnails