தினம் ஒரு ''காசி ஆனந்தன்'' கவிதை

முரண்.. இறைவனின் வாகனம் என்றான் நாயை அவதாரம் என்றான் பன்றியை இறைவனே என்றான் குரங்கை இவனே திட்டினான் என்னை நாயே! பன்றியே! குரங்கே!

Friday, December 25, 2009

பேயைய் பார்த்தேன் கண்ணுக்குத் தெரிந்தது




இரவில் நீங்கள் எதைக்கண்டு அதிகம் பயப்படுவீர்கள் என்று கேட்டால் பலரும் சொல்கின்ற பதில் பேய் பிசாசு என்பதாகும் உண்மையில் பேய் அல்லது பிசாசு இருக்கின்றதா? பேய் அல்லது பிசாசு என்றால் என்ன? இந்தக் கேள்வியை கேட்டுப்பாருங்கள்!

பேய் - பிசாசு என்பது இறந்தவர்களுடைய ஆவி இதில் நல்ல ஆவியும் இருக்கிறது கெட்ட ஆவியும் இருக்கிறது இவற்றில் கொள்ளிவால் பேய்,இரத்தக்காட்டேறி,சுடலை மாடன், மோகினி-சங்கிலி என்று பல வகைகள் இருக்கின்றன, ப்படியான பதில்கள்தான் எமக்கு இதுவரை தரப்படுகின்றன, சாவுக்கு குறிக்கப்பட்ட திகதிக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டு மரணமடைபவர்கள் ஆவியாக அலைவார்கள் என்றும் சொல்லப்படுவதுண்டு கொலை செய்யப்படுபவர்களும் தங்களை கொலை செய்தவர்களை பழிவாங்குவதற்காக ஆவியாக அலைவார்கள் என்றும் -இந்த வகை ஆவிகளே கெட்டஆவிகள் என்றும், கூறப்படுகின்றது.இந்த ஆவிகளுக்கு கால்கள் இல்லை என்றும் இவை மரங்கள் மயானங்கள்,
பாழடைந்த கட்டிடங்கள், தங்கியிருக்கும் என்று இரவு வேளைகளிலேயே அதிகம் நடமாடும் என்றும்- சொல்லப்படுவதுண்டு.

விஞ்ஞானரீதியாகப் பார்த்தால் ஒரு மனிதனின் மரணம் என்பது அவனது மூளையும் இதயமும் செயலற்றுப் போவதாகும், மூளை செயலற்று விட்டால் அல்லது இறந்துவிட்டால் சகல
அசைவுகளும் நின்றுவிடும் அதில் உள்ள ஞாபகங்கள், பதிவுகள் எல்லாமே அழிந்துவிடும். அது போல் இதயம் செயலற்று போய்விட்டால் இரத்த ஓட்டம் நின்றுவிடும், சுவாசம் நின்றுவிடும் இவையனைத்தும் ஒரு சேரநிகழும்போது ஒரு மனிதன் மரணமடைந்து விட்டதாக மருத்துவரீதியாக சொல்லப்படுகிறது.

ஒரு மனிதன் மரணம் அடைகின்றபோது மூக்கு மற்றும் ஏனைய துவாரங்கள் வாயிலாக அவன் ஏற்கனவே சுவாசித்த காற்று மட்டும்தான் வெளியேறுகிறது, ஆவி என்றோ உயிர் என்றோ, ஆன்மா என்றோ ஒன்றும் வெளியேறுவதில்லை, ஒரு மனிதனின் கடைசி மூச்சாக வெளியேறும் காற்றை எடுத்து பரிசோதித்தால் அதில் காபனீரொட்சைட்டும், ஒட்சிசன், நீராவி, முதலான வாயுக்கள்தான் இருக்கும்.

ஓரு இயந்திரம் , அல்லது தன்னுடைய செயற்பாட்டுத்திறனை இழந்து விட்ட ஒரு துப்பாக்கி தனது கடைசி செயற்பாட்டுடன் செயலற்றுப்போகும் போது என்ன நடக்குமோ ஒரு மனிதன் இறக்கும் போதும் அதுதான் நடக்கிறது. ஓரு பழுதடைந்த செயலற்று போன இயந்திரத்தின் பாகங்கள் பிரித்தெடுத்து வெறோரு இயந்திரத்திற்கு பொருத்துவதை போலவே இறப்புக்குள்ளாகும் மனிதனின் கண், சிறுநீரகம், இதயம், முதலான பல உறுப்புக்கள் , இந்த உறுப்புக்களில் பழுதுள்ள வேறோரு மனிதர்களுக்கு பொருத்தப்படுகின்றன.
ஏனவே மனிதனின் மரணத்தின் போது இயமன் எருமைக்கிடாயில் வந்து பாசக்கயிற்றை விசி உயிரை எடுத்துக்செல்கிறான் , என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதையாகும்.

அப்படி என்றால் ஆவி அல்லது பேய் என்று சொல்லப்படுவ தெல்லாம் என்ன?
இது ஒரு மனப்பயம் அல்லது பிரம்மை என்று சொல்லலாம் ஒரு மனிதன், உயிருடன் இருக்கும்போது நடந்துகொண்ட விதம் பேசிய பேச்சுக்கள், செய்த செயல்கள் இவையல்லாம்
மற்றவர்களுடைய மனங்களில் பதிவாகின்றன இந்தப்பதிவுகள் அந்த மனிதன் இறந்தவுடன் நினைவுகளாகின்றன.இறந்த அந்த மனிதனுடன் மிக நெருக்கமாக பழகியவர்களுக்கும் (குடும்பத்தினர்,உறவினர்,நண்பகள்) அந்தமனிதர்களுக்கு தீங்கிளைத்த வர்களையும், அவனது இழப்பை சுலபமாக ஏற்றுக்கொள்ளாத முடியாத நிலையிருக்கும் அந்த மனிதனுடைய உடல் எரிந்து சாம்பலாகும் காட்சியை பார்க்காதவர்களுக்கு இந்த நிலை அதிகம் இருக்கும் அவர்களது மூளைக்கலங்கள் அந்த மனிதனின் இழப்பை சுலபமாக ஏற்றுக் கொள்வதில்லை. அந்த மனிதன் விட்டுச்சென்ற தடயங்கள் அல்லது அந்த மனிதனைப்பற்றிய
நினைப்பு வரும்போது அவன் உயிரோடு தங்களுடன் வாழ்கின்றான், என்றோரு பிரம்மை உருவாகின்றது, இவை தான் பேய் பிசாசுகள் தொடர்பான கட்டுக்கதைகளுக்கு அடிப்படையாக அமைகின்றன. பகலில் கடும் வெய்யில் காலத்தில் பரந்த வெளியில் நீங்கள் சென்றால்துரத்தில் தண்ணீர் ஓடுவது போன்ற ஒரு காட்சியை நீங்கள் பார்க்கமுடியும். ஆனால் கிட்டச் சென்று பார்த்தால் எதுவும் இருக்காது இதை கானல் நீர் என்று சொல்வார்கள், அதாவது சூரியஒளி தரையில் பட்டு தெறிக்கும்போது இது ஏற்படுகிறது.

இதே போலவே இரவில் காட்டுப்பகுதிகள் மற்றும் வயல் வெளிகள், சதுப்பு நிலங்களில் மங்கலாக சில பொருட்கள் அசைந்து செல்வதைப்போல காட்சிகள் தென்படும், இவையும், அந்த பகுதிகளில் உள்ள இரவு வெப்பநிலை மற்றும் பனிமூட்டத்தால் இவ்வாறு தென்படுகின்றன.

மொத்தத்தில் பேய் பிசாசு என்பது எங்களுடைய நினைப்பில்தான் இருக்கிறதே தவிர வெளியில் இல்லை.சில சதுப்பு நிலங்களில் திடீரென்று தீப்பற்றிக் கொண்டு அந்த
தீப்பிழம்புகள் காற்றில் மிதந்து செல்வதுண்டு இதைத்தான் கொள்ளிவால் பேய் என்று சொல்கிறார்கள் இந்தப் பேய் ஆட்கள் கிட்டப்போனால் அடித்து எரித்துக் கொன்று
விடும் என்றெல்லாம் கதை சொல்லப்படுவதுண்டு.

உண்மையில் சதுப்பு நிலத்துக்கு அடியில் இருக்கும் அடர்த்திகுறைந்த வாயுக்கள்
அமுக்கம் காரணமாக வெளியில் வரும்போது தீப்பற்றிக் கொள்கின்றன. இந்த தீயை கொள்ளிவால் பேய் என்று நினைத்து பயந்து ஒடுவர் ஓட முற்பட்டால், அந்த தீப்பிழம்பு அவரை துரத்திச்செல்லும் இது எனென்றால் நாங்கள் ஓடும்போது காற்றை கிழித்துக்கொண்டுதான் ஒடுகின்றோம். இவ்வாறு ஓடும்போது எங்கள் முதுகுக்குபின்னால் ஒரு வெற்றிடம் வரும், அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு
அருகில் உள்ள காற்று வரும்போது அதில் மிதந்து கொண்டு இருக்கும் இந்த தீப் பிழம்பும் ஓடிவரும் இதைத்தான் கௌ;ளிவால் போய் துரத்துகின்றது என்று கிளைந்து பலர் உயிரிழந்து விடுகின்றார்கள் இந்த உயிரிழப்பிற்கு காரணம் பயத்தினால் வரும் மாரடைப்புத்தான் அடுத்து நாங்கள் சில இடங்களில் சில வீடுகளில் படுத்து உறங்கும் போது அது பகலாய் இருந்தாலென்ன இரவாக இருந்தாலென்ன எங்களுக்கு ஏதோ ஆபத்து வருவதைப்போலவும் எங்களை யாரோ கொல்ல வருவதைப் போலவும் கனவு வரும். நாங்கள் கத்திப் பார்ப்போம் குரல் வெளியே வராது, எழும்பி ஓடப்பார்ப்போம், உடம்பு அசையாது, இப்படி ஒரு விசித்திரமான நிலை உங்களில் பலருக்கும் வந்திருக்கலாம்
இவ்வாறு நடப்பது பேயின் வேலை என்றும் இந்தப் பேய்க்கு அழுக்குப் பேய் என்றும் என்றும் நம்மவர்கள் பேரும் வைத்திருக்கின்றார்கள. இரவில் தன்pயாகச் சென்றால்
காற்றுக் கறுப்புப்பிடித்து வருத்தம் வரும் என்றும் மோகினிப் பேய் பிடித்துவிடும் என்றும் நமது கிராமங்களில் சொல்லக் கேட்டிப்பீர்கள். குழந்தைகளை இரவில் வெளியில் கொண்டு சென்றாலும் இப்படி சொல்வதுன்டு இரவில் சாப்பாட்டை
வெளியில் எடுத்துச் செண்றாலும் பேய் அதிலுள்ள சாற்றை உறிஞ்சி விடும் என்றும் கிராமத்து மக்கள் சொல்வதுன்டு. இதற்காக இரவில் சாப்பாட்டை வெளியில் கொண்டு செல்லும் போது கரித்துண்டு ஒன்;றை (கார்பன் ) அதற்குள் போடுவதுன்டு அல்லது இரும்புக்கம்பி ஒன்றை கூடவே எடுத்து செல்வதுன்டு (இப்படிச் செய்தால் பேய் வராது
என்பது அவர்களது நம்பிக்கை ) உண்மையில் நாம் உயிர் வாடுகின்ற இந்தப் புமியில் மேற்பரப்பில் பல்வேறு மின் காந்த அலைகளும், சூரியக் குடும்பத்திலே உள்ள பல்வேறு
கோள்களினதும் உப கோள்களினதும் கதிர் வீச்சு சக்தி அலைகளும் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டிருக்கும், அதேபோல மனிதனுக்கு கெடுதி விளைவிக்கக் கூடிய கொடிய வைரசுகளும் பக்டீரியாக்களும் கூடக்காற்றில் அலைந்து கொண்டிருக்கும் சூரிய சக்திக்கு இயல்பாகவே அனைத்துப் பொருட்களையும் எரிக்கும் சூடாக்கி
விரிவடையச்செய்யும் தன்மை இருக்கிறது பகலில் நாம் நடமாடும் போது சூரியக்கதிர்கள் ஓரளவிற்கு எம்மை பாதுகாக்கின்றன ஆனால் இரவில் அவ்வாறான தன்மைகள் மிகக் குறைவு அதனாலேயே இரவில் காடுகள், வயல்வெளிகள், சதுப்புநிலங்கள் கடற்கரைகள் என்று பயணம் செய்பவர்களின் உடலில் கதிர்வீச்சுத் தாக்கமும்
நோய்க்கிருமிகளின் தொற்றும் ஏற்பட வாய்பும் அதிகமாக இருக்கிறது.

இதனாலேயே இரவில் வெளியே சென்று விட்டு வருபவர்கள் (சில இடங்களில் பகலில் கூட ) குளித்துவிட்டு அல்லது கை கால் கழுவிவிட்டு வீட்டுக்குள் வரவேண்டும் அவ்வாறு
செய்யாவிட்டால் பிள்ளைகளுக்குக் கூடாது என்று நமது பெரியவர்கள் சொல்வதுண்டு.அவர்கள் பேய் பிசாசுகளோடு சம்மந்தப்படுத்தி இதைச் சொன்னாலும் இதற்குரிய அடிப்படைக்காரணம் இதுதான்உணவை வெளியில் எடுத்துச்செல்லும் போது கூட இது தான் நடக்கிறது பொதுவாக கரிக்கு (கார்பன் ) அல்லது இரும்புக்கு கதிர்களை
உறிஞ்சும் சக்தி இருக்கின்றது, இதனாலேயே அவற்றை உணவில் போட்டு எடுத்துச்செல்லும் வழக்கம் இருக்கிறது.

உணவு பழுதாகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இது சொல்லப்பட்டதே அன்றி பேய் பிசாசு சத்தை உறிஞ்சி விடும் கூடிக்கொன்டு வந்துவிடும் என்பதற்காகவல்ல.

1 comment:

தமிழ் said...

விளக்கம் அருமை. சிலரை பேய் எனப்படும் வாயுக்கள் அவர்கள் படுத்திருக்கும் போது மேலிருந்து அழுத்துவதாக சொல்லப்படுவது பற்றியும் எழுதியிருந்தால் நன்றாக இருக்கும்.

இன்னொறு இடுகை

Related Posts with Thumbnails