பூமியின் துணைக்கோளான சந்திரனில் தண்ணீர் இருப்பதாக நாஸா ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீண்டகாலமாக இந்த ஆராய்ச்சி இடம்பெற்றுவந்ததாகவும் அண்மைய ஆய்வுகளால் ஆதாரத்துடன் நிரூபிக்கக் கூடியதாக உள்ளதாகவும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.
“சந்திரனில் தண்ணீர் உண்டு என்பதை நாம் கண்டுபிடித்துள்ளோம். மிகுந்த சந்தோசத்துடன் இந்தத் தகவலை உலகுக்கு கூறுகிறோம்” என நாஸா ஆய்வுநிலையத்தின் திட்டமிடல் பிரிவைச் சேர்ந்த விஞ்ஞானி எந்தனி கொலபிரேட் தெரிவித்துள்ளார்.
ஆய்வின் புதியதொரு பக்கம் திறந்திருக்கிறது எனக் குறிப்பிடும் எந்தனி, தண்ணீர் அதிகம் இருப்பதை தமது செயற்கைக் கோள்களில் தெளிவாக காட்டப்படுவதாகவும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment