மனிதர்களில் பொதுவாக காணப்படும் ஒருவகை பயம் பின்னாளில் மனோவியாதியாக மாறி விடுவதுண்டு.
கமல்ஹாசன் நடித்த `தெனாலி' படத்தில், அவர் எதற்கெடுத்தாலும் பயப்படுபவராக நடித்திருப்பதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.சிலர் குழந்தைப் பருவத்தில் இருந்தே பயந்த சுபாவம் உள்ளவர்களாக இருப்பர். வேறு சிலர் ஏதாவதொரு நிகழ்ச்சிக்குப் பிறகு பயந்த நிலையைக் கொண்டிருப்பர்.
இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் அவர்கள் வளரும் முறை எனலாம். சிறிய வயதில் குழந்தைகளை பயமுறுத்துவதற்காக `பூச்சாண்டி' என்று தொடங்கி, காலப்போக்கில் அவர்கள் வேறுவகையான பயம் அல்லது அச்சத்தை தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்திக் கொள்வார்கள்.
வேறு சிலருக்கு தாங்கள் செய்யும் சட்டவிரோத செயலால் பயம் தானாகவே ஏற்பட்டு விடும். அதாவது எப்போது மாட்டிக் கொள்வோமோ என்ற ஒரு பயம் இருக்கும்.
திறமையின்மையால் தவிப்பார்கள். மாறாக தங்கள் திறமையையும் வளர்த்துக் கொள்ளாமல், எப்போதும், ஏதாவதொரு குற்ற உணர்ச்சியுடனேயே சந்தேகக் கண்களைக் கொண்டிருப்பார்கள்.
ஏதாவது சூழ்ச்சி தங்களுக்கு எதிராக இருக்குமோ என்பதை சிந்திப்பதிலேயே அதிக நேரத்தை செலவிடுவதால், பணியை திறம்பட செய்ய முடியாமல், அதுவே அவர்களின் வேலைத் திறனைப் பாதித்து விடும்.
நாளடைவில் தங்களுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருக்கும் நிலை, மனதளவில் எரிச்சலை வரவழைத்து, எதிரில் இருப்பவர்களிடம் தேவையற்ற கோபத்தை உருவாக்கும். மன அழுத்தம் அதிகரிக்கும். இதன்காரணமாக மனோதிடம் பாதிக்கப்பட்டு, குறிப்பிட்ட காலத்தில் மனோவியாதியாகி விடக்கூடிய சூழல் உருவாகும்.
எனவே மனதை குழப்பம் இல்லாமல் வைத்திருப்பதுடன், இறுக்கம் ஏற்படும்பட்சத்தில் உடனடியாக உரிய மனோதத்துவ நிபுணரை அணுகி கவுன்சலிங் எடுத்துக் கொள்ளலாம். தன்பயத்தை தவிர்த்து, தலைசிறந்து வாழ்வோம்!
உதாரணமாக இங்கே ஒரு மனனோயாளி சாய் பாபா என்ற மோசடி சாமியார்
No comments:
Post a Comment