தினம் ஒரு ''காசி ஆனந்தன்'' கவிதை

முரண்.. இறைவனின் வாகனம் என்றான் நாயை அவதாரம் என்றான் பன்றியை இறைவனே என்றான் குரங்கை இவனே திட்டினான் என்னை நாயே! பன்றியே! குரங்கே!

Sunday, December 13, 2009

உலகவாழ் தமிழர்களே வேட்டைக்காரனைப் புறக்கணியுங்கள்.புலம்பெயர் தமிழர்கள் மட்டுமல்லாமல் உலகவாழ் அனைத்து தமிழர்களும் இத்திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டும் ஏனெனில் ஈழத்தில் கொல்ல்ப்பட்ட ஒரு இலட்சம் தமிழர்களின் கொடூர கொலைக்கு காரணமாகிய இந்திய காங்கிரசுடன் வேட்டைக்காரன் வெற்றிக்குப் பிறகு வியய் ஒன்றுசேரவுள்ளார் இதற்காக இராகுல் காந்தியுடனும் இரகசியஉடன்பாட்டுக்குள் வந்துள்ளார். அன்பார்ந்த உலகத் தமிழர்களே குறிப்பாக மலேசிய மற்றும் சிங்கைத்தமிழ்ர்களே கொடூர முகம் கொண்டு ஈழத்தமிழர்களின் போராட்டத்தை இந்திய அரசு சிதைத்தது போல் நாளை உங்கள் நலனும் சிதைக்கப் படலாம், எனவே தமிழினத்துக்கு எதிரான சக்தியுடன் துணைபோகும் அனைவரையும் எம்மாலன சகல வழிகளிலும் புறக்கணிப்போம்.

வேட்டைக்காரன் புறக்கணிப்பிற்கான காரணங்கள்

காங்கிரஸுடன் ரகசிய உறவு வைத்துக் கொண்டு, ஒப்புக்காக ஈழத் தமிழர்களுக்குஆதரவளிப்பதாக நாடாகமாடும் புல்லுருவிகளை இனம்காண்பதற்காக.மேலும் இலங்கை ராணுவத்துக்கு வன்னிப் போர் காலத்தில்பாடல்கள் உருவாக்கிய ராஜ் வீரரத்னே என்பவருடன் இணைந்துபணியாற்றும் விஜய் ஆண்டனி, இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். தமிழ் உணர்வுக்கு எதிரான ஒரு சிங்களப் பாடலின் மெட்டையும் அப்படியேவேட்டைக்காரனில் பயன்படுத்தியுள்ளார். எனவே இந்தப் படத்தைஅனைத்து தமிழர்களும் புறக்கணிக்க வேண்டும்.

இல்லை இது ஒரு திரப்படம்தானே இதைக் கலைக்கண்கொண்டுதான் பார்க்கவேண்டும் என்பவர்கள் கீழுள்ள புகைப்படங்களையும் பர்த்துவிட்டு விஜய்-அனுச்சாவின் காதல் களியாட்டத்தையும் திரையில் கண்டுகளியுங்கள்.


இந்திய அரசினால் எமது போராட்ட்த்தையும் மக்களையும் சிதைப்பதற்காகவழங்கப்பட்டதும் உலகிலே தடைசெய்யப்பட்டதுமான பொஸ்பரஸ் எரிகுண்டுகளால்எரிந்த ஈழம்.
அடங்க மறுத்த எமது மறவர் படை
(உண்மயான காதாநாயகர்கள்/REAL HEROES )


எரிந்து சாம்பலான எமது சகோதரச்கோதரிகள்.

No comments:

இன்னொறு இடுகை

Related Posts with Thumbnails