தினம் ஒரு ''காசி ஆனந்தன்'' கவிதை
Saturday, December 26, 2009
சிரிப்பதா? சிந்திப்பதா? கேள்வி பதில்கள்.
தட்டிக்கேட்கும் மனிதர்கள் வேண்டும்!
கடலூர் ஆயுதப் படை மைதானத்தில் இளம் நீல நிற பனியன் அணிந்த இளைஞர்கள் கூடியிருந்தார்கள். இரண்டு அணியினரையும் கைகளைப் பிடித்து பண்ருட்டி எம்.எல்.ஏ. வேல்முருகன் ஆரம்பித்துவைத்ததுதான் தாமதம். அரை மணி நேரத்துக்கு யார் உதை வாங்கியது, யார் திருப்பிக் கொடுத்தது என்று தெரியாத அளவுக்குக் கடுமையான சண்டை. முடிந்ததும் சிலம்பம். அடுத்து சுருள்வாள் என்று அத்தனையும் அசைவ வகையறாக்கள். இந்த அமைப்புக்குத் தலைவர், 'நாம் தமிழர்' இயக்கத் தலைவர் இயக்குநர் சீமான். காப்பாளர், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. மாநில ஒருங்கிணைப்பாளர், பா.ம.க. அமைப்புச் செயலாளர் வேல்முருகன். மேட்டூரைச் சேர்ந்த பிரபல கிக் பாக்ஸிங் வீரர் சிவபெருமானைப் பயிற்சியாளராக நியமித்திருக்கிறார்கள்.
''ஒரு கிளைக்கு 100 வீரர்களையாவது உருவாக்குவது இப்போதைய திட்டம். கிக்பாக்ஸிங், தமிழனின் கலை. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த போதிதர்மா, இந்த தற்காப்புக் கலையைக் கண்டுபிடித்தவர். அவர்தான் இங்கே இருந்து வெளிநாட்டுக்கு இந்தக் கலையைக் கொண்டுபோனார். வெளிநாட்டுக்காரர்கள் இதில் தேறிவிட்டார்கள். ஆனால், நம்மில் ஒருவர்கூட ஒலிம்பிக்கில் கிக்பாக்ஸிங்கில் தங்கப் பதக்கம் வாங்கும் அளவுக்கு முன்னேறி வரவில்லை. அதனால்தான் நான் பயிற்சி கொடுத்துட்டு வர்றேன்'' என்கிற சிவபெருமான், கராத்தேவுக்காக மூன்று முறையும், கிக்பாக்ஸிங்கில் இரண்டு முறையும் அகில இந்திய அளவில் பதக்கங்கள் வாங்கியவர்.
இவரைக் கண்டுபிடித்தவர் கொளத்தூர் மணி. ''30 ஆண்டுகளுக்கு முன்னால் 'வெண்தாடி வேந்தர் உடற்பயிற்சிக் கழகம்' வைத்து, தோழர்களுக்கு வீரக் கலைப் பயிற்சிகளைக் கொடுத்து வந்தோம். காலப்போக்கில் அது நின்று போனது. மீண்டும் இப்போது ஆரம்பித்து இருக்கிறோம்!'' என்கிறார்.
''எங்கள் ஊர் கிராமத்துப் பொங்கல் விழாவில் 25-க்கும் மேற்பட்ட தமிழ் விளையாட்டுக்களை நடத்தி வருகிறேன். நல்லொழுக்கங்களைக் கற்றுத்தரக்கூடிய பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறேன். அதன் அடுத்த கட்டமாகத்தான் கிக்பாக்ஸிங் பயிற்சி. இதை நடத்துபவர்கள்தான் அரசியல்வாதிகளே தவிர, அரசியலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. கிராமத்துத் தமிழனின் வீரத்தை, பழம் பெருமை பேசினால் மட்டும் போதாது. அதை மீண்டும் பெற தமிழர்கள் அனைவரும் உடலால் பலம் பெற வேண்டும். சமூக விரோதிகளிடம் இருந்து காப்பாற்றிக்கொள்வதற்கு மட்டும் அல்ல; சமூக அவலங்களைத் தட்டிக்கேட்கும் மனிதர்களாகவும் தமிழர்கள் மாற வேண்டும்'' என்கிற எம்.எல்.ஏ. வேல்முருகனிடம், ''அரசியல் உள்நோக்கம் இருப்பது போலத் தெரிகிறதே?'' என்றோம்.
''கிக்பாக்ஸிங் பயிற்சி பெற்ற ஆயிரம் பேரைத் தயாரிப்பதும், வரும் ஜனவரி மாதம் மாநிலம் தழுவிய போட்டியை நடத்துவதும்தான் எங்களது திட்டம். அடுத்த ஒலிம்பிக்கில் தமிழன் ஒருவன் கிக்பாக்ஸிங்கில் தங்கப் பதக்கம் வாங்க வேண்டும் என்பது எங்களது ஆசை. மற்றபடி யார் எந்த விமர்சனம் வைப்பது பற்றியும் எங்களுக்குக் கவலை இல்லை'' என்கிறார்.
சீமானிடம் இதுபற்றிக் கேட்டபோது, ''சிறு வயதில் இருந்தே கராத்தே, சிலம்பம் பயிற்சி பெற்றவன் நான். தன்னம்பிக்கை இதனால் வரும். எதையும் சாதிக்க வேண்டும் என்ற தைரியம் வரும். நம் தலைமுறைப் பிள்ளைகள் இந்தக் கலைகளைப் படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தமிழகம் முழுவதும் படிப்பகம் ஆரம்பிப்பது எவ்வளவு முக்கியமோ, அதைப்போல உடற்பயிற்சிக் கழகங்களை அமைக்கவும் 'நாம் தமிழர் இயக்கம்' திட்டமிட்டு உள்ளது'' என்று அடுத்த திட்டத்தைத் தூக்கிப் போடுகிறார்!
Friday, December 25, 2009
பேயைய் பார்த்தேன் கண்ணுக்குத் தெரிந்தது
Thursday, December 24, 2009
2009 நோபல் நாயகர்கள்
இயற்பியல்:
இயற்பியலுக்கான நோபல் பரிசு அக்டோபர் 6ந் தேதி அறிவிக்கப்பட்டது. தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தில் 2 புதிய கண்டுபிடிப்புகளுக்கு இந்த விருது கிடைத்து உள்ளது. சீனாவைச் சேர்ந்த சார்லஸ் கே காவ் (75), அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் இஸ்மித், கனடாவைச் சேர்ந்த வில்லார்ட் எஸ்பாய்லே (85), ஆகிய மூவர் இந்தப் பரிசை பகிர்ந்து கொள்கின்றார்கள்.
வேதியியல்:
வேதியியலுக்கான பரிசையும் 3 பேர் பகிர்ந்து கொள்கின்றார்கள். அமெரிக்க வாழ் இந்தியரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், இஸ்ரேலைச் சேர்ந்த பெடா இயோனந்த,அமெரிக்காவைச் சேர்ந்த தாமஸ் ஸ்டீட்ஸ் ஆகியோர் வேதியியல் நோபல் பரிசை பெறுகிறார்கள். அக்டோபர் 7 ந்தேதி இந்தப் பரிசு அறிவிக்கப்பட்டது.
இலக்கியம்:
இலக்கியத்திற்கான நோபல் பரிசு அக்டோபர் 8ந் தேதி அறிவிக்கப்பட்டது. ருமேனியா நாட்டைச் சேர்ந்த ஹெர்டா முல்லர் என்பவரின் படைப்புக்கு இந்த பரிசு கிடைத்துள்ளது.
அமைதி:
அமைதிக்கான நோபல் பரிசு அக்டோபர் 9 ந் தேதி அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அறிவிக்கப்பட்டது. உலக சமாதானம் மற்றும் உலக நாடுகளில் அணு ஆயுதக் குறைப்பு நடவடிக்கைகளுக்காக பாடுபட்டதற்காக, ஒபாமாவுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
மருத்துவம்:
இந்த ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. எலிஷபெத் எச். பிளக்பர்ன், கேரோல் டபுள்யு கிரிடியர், ஜேக் டபிள்யூ. ஷீஸ்டாக் ஆகியோர் இந்தப் பரிசை பெற தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
பொருளாதாரம்:
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அக்டோபர் 12ந் தேதி அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த எலினோர் ஆஸ்ட்ரோம், ஆலிவர் இ.வில்லியம்சன் ஆகியோர் இந்தப் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பரிசுக்குழு அறிவித்தது.
சிவனைப் பூஜிப்-பதன் மூலம் கடன் தொல்லை நீங்கும்..
Sunday, December 20, 2009
99 சதவீத கனடா மக்களின் தீர்வு
எங்கே ஓடி மறைந்தீர்கள்?
காஞ்சிபுரம் மச்சேஸ்வரன் கோவில் பார்ப்பன அர்ச்சகர் தேவநாதன், கோயில் கர்ப்பக்கிரகத்துக்குள் அர்ச்சனை செய்கிறார், “சூத்திரர்” நுழைந்தால் தீட்டாகிவிடும் என்று பார்ப்பனர்கள் உச்ச நீதிமன்றம் போய் வழக்காடும் “கர்ப்பகிரகத்துக்குள்”, “மச்சேஸ்வரன்”கள் முன்னாலே பல பெண்களுடன் “கிருஷ்ண லீலை”களை (அதாவது பாலுறவுகள்) நடத்தியுள்ளார். ஆகமவிதிப்படி அங்கீகரிக்கப்பட்டவரான இந்த புனிதரின் பக்தி நடவடிக்கைகள் அலைபேசி வழியாக படம் பிடிக்கப்பட்டது. அதை ஜூனியர் விகடன் ஏடு படத்துடன் பரபரப்பாக அம்பலப்படுத்தியது.
பிறகு “பிராமண குல” ஒழுக்க சீலரின் விளையாட்டுகள் குறுந்தகடுகளில் பதிவாக்கப்பட்டு, நாடு முழுதும் கடைகளில் அமோக விற்பனையாயின. சில வாரங்கள் தலைமறைவாகி, பிறகு காவல்துறையிடம் ‘ஆகம விற்பன்னர்’ சரணடைந்தார். இப்போது காவல்துறையில் விசாரிக்கப்படுகிறார். காஞ்சிபுரம் பெருநகர நீதிபதி காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்க 2 நாள்கள் மட்டுமே அனுமதித்தார். காவல்துறையோ, குறைந்தது 5 நாளாவது காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளது.
வழக்கின் நேரிடை சாட்சி ‘மச்சேசுவரன்’; “அவன்” சாட்சி சொல்ல வரமாட்டான் என்பது கருவறைக்குள்ளேயே இருக்கும் தேவநாதனுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும், அலைபேசிப் பதிவுகள் சாட்சியாகிவிட்டன.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்குள் சங்கர்ராமன் வெட்டி வீழ்த்தப்பட்டார். கொலைக் குற்றச்சாட்டு காஞ்சி ஜெயந்திரன் மீது திரும்பி, குற்றவாளிக் கூண்டில் நிற்கிறார். அதே காஞ்சியில் ‘மச்சேஸ்வரன்’ கருவறைக்குள் இந்த ‘பாலுறவு’களை பார்ப்பன அர்ச்சகர் நடத்தியிருக்கிறார்.
இந்துக்கள் உள்ளத்தை பகுத்தறிவாளர்கள் புண்படுத்துவதாக அவ்வப்போது ஓலமிடும் இராம கோபாலன், இல. கணேசன், துக்ளக் சோ, சு.சாமி குழுவினர், எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. வாயை இறுகக் கட்டிக் கொண்டு விட்டார்களே!
“சூத்திரன்” கருவறைக்குள் நுழைந்தால் சாமி தீட்டாகிவிடும் என்று கூறும் பார்ப்பன சிரோன்மணிகளே!
பார்ப்பான் கருவறைக்குள் பெண்களை பாலுறவு கொண்டால் கருவறை புனிதம் பெற்று விடுமா?
எங்கே, மானம் சூடு சொரணை இருந்தால் பதில் சொல் பார்க்கலாம்!
Saturday, December 19, 2009
இந்தியா உருவானது எப்படி?
ஆங்கிலேயர்கள் இந்தியா வருவதற்கு முன், இப்போது இருக்கும் இந்தியா என்ற நாடு இருந்ததா என்ற கேள்விக்கு, இல்லை என்பதே எல்லோருக்கும் தெரிந்த பதில். வட இந்தியாவை எடுத்துக் கொணடால், அதன் 1800 ஆண்டு வரலாற்றில், ஒரே பகுதியாக இருந்ததாக வரலாறு கிடையாது. மவுரியர்,கனிஷ்கர், குப்தர், அர்ஷவர்த்தனர், சுல்தான்கள், பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர். தனித்தனி நிலப் பகுதிகளில், தனித்தனி ஆட்சிகளே நடந்தன. ஒரே குடையின் கீழ் பெரும் நிலப்பகுதி கொண்டு வரப்பட்டபோது கூட, தன்னாட்சிகளை அழித்து விடவில்லை.
மராத்தியை மய்யமாகக் கொண்ட மத்திய இந்திய பகுதி, தக்காணிப் பிரதேசம் என்று அழைக்கப்படுவ தாகும். இங்கும், தனித்தனிப் பிரதேசங்களும், தனித்தனி ஆட்சிகளுமே நடந்திருக் கின்றன. மராத்தி, ஒரிசா,கன்னடம் மற்றும் ஆந்திரப் பகுதி களைக் கொண்ட இந்தத் தக்காணப் பிரதேசத்தில் சாத வாகணர் என்ற ஆந்திரர்கள், சாளுக்கி யர், ராஷ்டிரகூடர்,கங்கர், கடம்பர் என்று பல் வேறு வம்சத்தினரின் ஆட்சி கள், தனித்தனிப் பகுதிகளில் நடந்தன.
13 ஆம் நூற்றாண்டில், வட இந்தியாவி லிருந்து, மொகலாயர்கள் படை எடுத்து வந்து, தக்காணத்தின் வடபகுதியைக் கைப்பற்றினர். அப்போது தக்காணத் தென்பகுதியில் விஜயநகரப் பேரரசு இருந்தது. இது, மத்திய இந்தியாவின் நிலை என்றால், தென்னிந்தியாவின் வர லாறு என்ன? சேரர்,சோழர், பாண்டியர், களப்பிரர், பல்லவர் மற்றும் குறுநில மன்னர்களின் ஆட்சிகளுக்குட்பட்ட, தனித் தனிப் பிரதேசங்கள்தான் இருந்தன. இந்திய வரலாற்றில், பெரும் நிலப் பகுதியைக் கைப்பற்றி, பல தனி யாட்சிகளை ஒழித்து - ஒரு முக ஆட்சியை உருவாக்கியவர்கள் மொக லாயர்கள் தான்!
மொகலாயர்கள் பேரரசு நடந்த காலத்தில்தான் பார்ப்பனர்கள் நாடு முழுவதும், சமூக அரங்கில் தங்கள் ஆதிக்கத்தை நிலைப்படுத்திக் கொண் டார்கள். இந்தியாவில் வாழ்ந்த முஸ்லிம் அல்லாத பல்வேறு இனக் குழுக்களை, பார்ப்பனர்கள் தங்கள் மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வந்ததும் இந்தக் காலத்தில் தான். முஸ்லிம் அல்லாத எல்லோரையும், மொகலாய மன்னர்கள் ‘இந்து’ என்று கூறியதும், ‘இந்து’ என்ற பெயர் வழக்கில் வந்ததும்,அக்காலத்தில் தான். சமஸ் கிருத சுலோகங்களையும், வேதங்களை யும் பார்ப்பனர்கள், தங்கள் சுயநலச் சுரண்டலுக்கு ஏற்ப திருத்தி அமைத்துக் கொண்டதும் அப்போதுதான்.
அப்போதும் தமிழ்நாடு மொக லாயர்கள் ஆட்சியின் கீழ் வரவில்லை. அத்தகைய மொகலாயப் பேரரசுகூட, அவுரங்கசீப்புக்குப் பிறகு வீழ்ந்து விட்டது. அதன் பிறகு 66 ஆண்டு களுக்கு, இந்தியத் துணைக் கண்டத்தைக் கட்டி ஆளும் ஒரே மய்ய அரசு எதுவும் உருவாகியதில்லை. ஆங்கிலேயரின் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பெனிதான் இங்கே குறி வைத்தது. இந்த வர்த்தகக் கம்பெனி உருவாக்கப் பட்ட நாள் 1.12.1600. இந்திய அரசர் களிடம் உரிமை வாங்கிக் கொண்டு, கடற்கரை ஓரமாக தங்களது வர்த்தகக் குடியேற்றங்களை இவர்கள் ஏற் படுத்திக் கொண்டனர். கி.பி. 1612 இல் முதன்முதலாக சூரத்திலும் தொடர்ந்து மசூலிப்பட்டிணம் (1616), அரிகர்பூர் (1633), சென்னை (1640), பம்பாய் (1669), கல்கத்தாவிலும் (1686) வர்த்தகக் குடியேற்றங்களை நிறுவினர்.
வர்த்தகம் செய்ய வந்தவர்கள், நாடு பிடிக்கும் ஆசையை விட்டு விடுவார் களா? இந்தக் கம்பெனி வெறும் கை யுடன் வந்துவிடவில்லை. தனக் காக ஒரு கடற்படையை வைத்துக் கொள்ளவும், தேவையான சட்டங்களை இயற்றிக் கொள்ளவும் பிரிட்டிஷ் ராணியிடம் உரிமை பெற்றிருந்தது. முதலில் மேற்கு வங்கத்தில் உள்ள சிட்டகாங் பகுதியைத் தாக்கி தோல்வி கண்டார்கள். பிரிட்டிஷ் கம்பெனி நாட்டை விட்டே வெளி யேற வேண்டும் என்று உத்தரவு போட்ட அவுரகசீப் மரணமடைந் தார். (கி.பி.1707) பேரரசு சிதைந்து, தனித்தனி ஆட்சிகள் உருவானது. தனது அதிகாரத்தை உறுதிப் படுத்த நேரம் பார்த்துக் கொண்டிருந்த ஆங்கிலேயர்களுக்கு நல்ல வாய்ப்பாகி விட்டது.
ராபர்ட் கிளைவ், ஆற்காடு பகுதியைப் பிடித்தார் (கி.பி.1749) தொடர்ந்து 12ஆண்டுகள் போர் நடத்தி தென்னிந்தி யாவின் பல பகுதிகளைப் பிடித்தனர். கருநாடகப் போர்கள் மூலம் ஆந்திரத் தின் பெரும் பகுதியைக் கைப்பற்றினர். வெற்றி களைக் குவித்த ராபர்ட் கிளைவ் வடக்கே போனார். பிளாசி யுத்தம் நடத்தினார்; அதில் வங்கம் வீழ்ந்தது. அதைத் தொடர்ந்து ஒரு நூற்றாண்டில், படிப்படியாக ஆங்கிலேயர்கள் கைப் பற்றிய பல்வேறு பகுதிகள்தான் இந்தியா. ஆங்கிலேயர் ஆட்சி செய்த இந்தியாவில், இன்றைய ஆப்கானிஸ்தான் நாட்டின் பெரும் பகுதியும், பர்மாவும் (இன்றைய மியான்மர் நாடு) இலங்கையும் அடங்கி இருந்தது.
அப்போது இலங்கை ஒரு மாவட்ட மாகக் கூட அங்கீகரிக்கப்படவில்லை;ஒரு வட்டமாகவே கருதப்பட்டு, அதன் நிர் வாக அலுவலகமே தமிழநாட்டில் தான் இருந்தது. இன்றைய பாகிஸ் தானும் பங்களாதேசும் அன்றைய‘இந்தியா’ தான். இப்போதுள்ள வட கிழக்கு மாநிலங்களோ, காஷ்மீரோ அன்றைய இந்தியாவில் இல்லை. ஆக, 3000 ஆண்டு கால வரலாற்றில் - தனித் தனிப் பகுதி களாக நிலவிய தேசங்களை - துப்பாக்கி முனையில் மிரட்டி, ஆங்கிலே யர்களால் உருவாக்கப்பட்ட நாடுதான் ‘இந்தியா’.