தினம் ஒரு ''காசி ஆனந்தன்'' கவிதை

முரண்.. இறைவனின் வாகனம் என்றான் நாயை அவதாரம் என்றான் பன்றியை இறைவனே என்றான் குரங்கை இவனே திட்டினான் என்னை நாயே! பன்றியே! குரங்கே!

Saturday, December 26, 2009

சிரிப்பதா? சிந்திப்பதா? கேள்வி பதில்கள்.

சர்தாஜி கேள்வி- பதில்கள்

கேள்வி1 : நூறு வருட போர் எவ்வளவு காலம் நடந்தது?
A : 100 வருடம்
B : 116 வருடம்
C : 99 வருடம்
D : 150 வருடம்

சர்தாஜி : தெரியவில்லை

கேள்வி2 : எந்த நாட்டில் "Panama hats" தயாரிக்கப்படுகிறது?
A : BRASIL
B : PANAMA
C : CHILE
D : EQUADOR

சர்தாஜி : பல்கலைகழக மாணவர்ககளிடம் இருந்து பதில் பெற்றார்!

கேள்வி 3 : எந்த மாதத்தில் ரஷிய மக்கள் "October Revolution" ஐ கொண்டடுவார்கள்?
A : JANUARY
B : SEPTEMBER
C : OCTOBER
D : NOVEMBER

சர்தாஜி : பொது மக்களிடம் இருந்து பதில் பெற்றார்!

கேள்வி 4 : "King George VI" இன் "first name" என்ன?

A : EDER
B : ALBERT
C : GEORGE
D : MANOEL

சர்தாஜி : அதிர்ஷ்ட அட்டைகளை பயன்படுத்துகிறார்!

கேள்வி 5 : பசிபிக் பெருகடலில் உள்ள "Canary Islands" தீவு எந்த விலங்கின் பெயரை அடிபடையாக கொண்டது?

A : CANARYBIRD
B : KANGAROO
C : PUPPY
D : RAT

சர்தாஜி : பதில் தெரியவில்லை !

------------------------------------------------------------------------------------------------------------


சர்தார்ஜியின் பதிலை கண்டு வியந்தீர்களா ? நகைதீர்களா?

இப்பொழுது இந்த கேள்வியின் பதில்களை நாமும் பார்ப்போமா?


பதில் 1 : நூறு வருட போர் 116 ஆண்டுகள் நடந்தது(1337-1453).

பதில் 2 : Equador நாட்டில் "Panama hats" தயாரிக்கப்படுகிறது.

பதில் 3 : "October Revolution" நவம்பர் மாதத்தில் கொண்டாடபடுகிறது.

பதில் 4 : "King George VI" இன் "first name" Albert. 1936 ஆம் ஆண்டு, அவர் தன்னுடைய பெயரை மாற்றினார்.

பதில் 5: பசிபிக் பெருகடலில் உள்ள "Canary Islands" தீவு "Puppy"-ன் பெயரை அடிபடையாக கொண்டது.
இலத்தின் மொழியில் "INSULARIA CANARIA" என்றால் "islands of the puppies" என்று அர்த்தம்.

இப்போது சொல்லுங்கள் யார் புத்திசாலி என்று ?

சர்தார்ஜிகள் மிகவும் தைரியசாளிகள். உழைப்பாளிகள்.

நீங்கள் உலகத்தின் எந்த மூலையிலும் சர்தார்ஜிகள் பிச்சை எடுப்பதை பார்க்க முடியாது.

எனவே சர்தார்ஜிகளை நகைப்பதை கைவிடுவோம்.

நம்மை ஆள்பவர்கூட ஒரு சர்தாஜி என்பதை மறந்து விடாதீர்கள்!!!!

மற்றவர் மனதை புண்ணாக்கும் நகைச்சுவைகளை மறப்போம்!!!!!!

தட்டிக்கேட்கும் மனிதர்கள் வேண்டும்!

சீமான், கொளத்தூர் மணி, வேல்முருகன் ஆகிய கடுங்கோபக்காரர்கள் மூன்று பேர் சேர்ந்து உதை குத்து சம்மேளனத்தை
ஆரம்பித்தால் ரணகளத்துக்குக் கேட்கவா வேண்டும்! செவி கிழியும் அளவுக்கு சேலத்தில் உதை விழுகிறது. முகம் நொறுங்கும் அளவுக்கு கடலூரில் குத்து இறங்குகிறது. என்னவாம் இந்த தமிழ்த் தேசியவாதிகளுக்கு என்ற கேள்வியைச் சுண்டிவிட்டால், ''தமிழனின் பாரம்பரிய வீரம் பட்டுப்போய்விடக் கூடாது என்பதற்காகத்தான்'' என்று சிரித்தபடி பதில் தருகிறார்கள்.

கடலூர் ஆயுதப் படை மைதானத்தில் இளம் நீல நிற பனியன் அணிந்த இளைஞர்கள் கூடியிருந்தார்கள். இரண்டு அணியினரையும் கைகளைப் பிடித்து பண்ருட்டி எம்.எல்.ஏ. வேல்முருகன் ஆரம்பித்துவைத்ததுதான் தாமதம். அரை மணி நேரத்துக்கு யார் உதை வாங்கியது, யார் திருப்பிக் கொடுத்தது என்று தெரியாத அளவுக்குக் கடுமையான சண்டை. முடிந்ததும் சிலம்பம். அடுத்து சுருள்வாள் என்று அத்தனையும் அசைவ வகையறாக்கள். இந்த அமைப்புக்குத் தலைவர், 'நாம் தமிழர்' இயக்கத் தலைவர் இயக்குநர் சீமான். காப்பாளர், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. மாநில ஒருங்கிணைப்பாளர், பா.ம.க. அமைப்புச் செயலாளர் வேல்முருகன். மேட்டூரைச் சேர்ந்த பிரபல கிக் பாக்ஸிங் வீரர் சிவபெருமானைப் பயிற்சியாளராக நியமித்திருக்கிறார்கள்.

''ஒரு கிளைக்கு 100 வீரர்களையாவது உருவாக்குவது இப்போதைய திட்டம். கிக்பாக்ஸிங், தமிழனின் கலை. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த போதிதர்மா, இந்த தற்காப்புக் கலையைக் கண்டுபிடித்தவர். அவர்தான் இங்கே இருந்து வெளிநாட்டுக்கு இந்தக் கலையைக் கொண்டுபோனார். வெளிநாட்டுக்காரர்கள் இதில் தேறிவிட்டார்கள். ஆனால், நம்மில் ஒருவர்கூட ஒலிம்பிக்கில் கிக்பாக்ஸிங்கில் தங்கப் பதக்கம் வாங்கும் அளவுக்கு முன்னேறி வரவில்லை. அதனால்தான் நான் பயிற்சி கொடுத்துட்டு வர்றேன்'' என்கிற சிவபெருமான், கராத்தேவுக்காக மூன்று முறையும், கிக்பாக்ஸிங்கில் இரண்டு முறையும் அகில இந்திய அளவில் பதக்கங்கள் வாங்கியவர்.

இவரைக் கண்டுபிடித்தவர் கொளத்தூர் மணி. ''30 ஆண்டுகளுக்கு முன்னால் 'வெண்தாடி வேந்தர் உடற்பயிற்சிக் கழகம்' வைத்து, தோழர்களுக்கு வீரக் கலைப் பயிற்சிகளைக் கொடுத்து வந்தோம். காலப்போக்கில் அது நின்று போனது. மீண்டும் இப்போது ஆரம்பித்து இருக்கிறோம்!'' என்கிறார்.

''எங்கள் ஊர் கிராமத்துப் பொங்கல் விழாவில் 25-க்கும் மேற்பட்ட தமிழ் விளையாட்டுக்களை நடத்தி வருகிறேன். நல்லொழுக்கங்களைக் கற்றுத்தரக்கூடிய பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறேன். அதன் அடுத்த கட்டமாகத்தான் கிக்பாக்ஸிங் பயிற்சி. இதை நடத்துபவர்கள்தான் அரசியல்வாதிகளே தவிர, அரசியலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. கிராமத்துத் தமிழனின் வீரத்தை, பழம் பெருமை பேசினால் மட்டும் போதாது. அதை மீண்டும் பெற தமிழர்கள் அனைவரும் உடலால் பலம் பெற வேண்டும். சமூக விரோதிகளிடம் இருந்து காப்பாற்றிக்கொள்வதற்கு மட்டும் அல்ல; சமூக அவலங்களைத் தட்டிக்கேட்கும் மனிதர்களாகவும் தமிழர்கள் மாற வேண்டும்'' என்கிற எம்.எல்.ஏ. வேல்முருகனிடம், ''அரசியல் உள்நோக்கம் இருப்பது போலத் தெரிகிறதே?'' என்றோம்.

''கிக்பாக்ஸிங் பயிற்சி பெற்ற ஆயிரம் பேரைத் தயாரிப்பதும், வரும் ஜனவரி மாதம் மாநிலம் தழுவிய போட்டியை நடத்துவதும்தான் எங்களது திட்டம். அடுத்த ஒலிம்பிக்கில் தமிழன் ஒருவன் கிக்பாக்ஸிங்கில் தங்கப் பதக்கம் வாங்க வேண்டும் என்பது எங்களது ஆசை. மற்றபடி யார் எந்த விமர்சனம் வைப்பது பற்றியும் எங்களுக்குக் கவலை இல்லை'' என்கிறார்.

சீமானிடம் இதுபற்றிக் கேட்டபோது, ''சிறு வயதில் இருந்தே கராத்தே, சிலம்பம் பயிற்சி பெற்றவன் நான். தன்னம்பிக்கை இதனால் வரும். எதையும் சாதிக்க வேண்டும் என்ற தைரியம் வரும். நம் தலைமுறைப் பிள்ளைகள் இந்தக் கலைகளைப் படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தமிழகம் முழுவதும் படிப்பகம் ஆரம்பிப்பது எவ்வளவு முக்கியமோ, அதைப்போல உடற்பயிற்சிக் கழகங்களை அமைக்கவும் 'நாம் தமிழர் இயக்கம்' திட்டமிட்டு உள்ளது'' என்று அடுத்த திட்டத்தைத் தூக்கிப் போடுகிறார்!

Friday, December 25, 2009

பேயைய் பார்த்தேன் கண்ணுக்குத் தெரிந்தது




இரவில் நீங்கள் எதைக்கண்டு அதிகம் பயப்படுவீர்கள் என்று கேட்டால் பலரும் சொல்கின்ற பதில் பேய் பிசாசு என்பதாகும் உண்மையில் பேய் அல்லது பிசாசு இருக்கின்றதா? பேய் அல்லது பிசாசு என்றால் என்ன? இந்தக் கேள்வியை கேட்டுப்பாருங்கள்!

பேய் - பிசாசு என்பது இறந்தவர்களுடைய ஆவி இதில் நல்ல ஆவியும் இருக்கிறது கெட்ட ஆவியும் இருக்கிறது இவற்றில் கொள்ளிவால் பேய்,இரத்தக்காட்டேறி,சுடலை மாடன், மோகினி-சங்கிலி என்று பல வகைகள் இருக்கின்றன, ப்படியான பதில்கள்தான் எமக்கு இதுவரை தரப்படுகின்றன, சாவுக்கு குறிக்கப்பட்ட திகதிக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டு மரணமடைபவர்கள் ஆவியாக அலைவார்கள் என்றும் சொல்லப்படுவதுண்டு கொலை செய்யப்படுபவர்களும் தங்களை கொலை செய்தவர்களை பழிவாங்குவதற்காக ஆவியாக அலைவார்கள் என்றும் -இந்த வகை ஆவிகளே கெட்டஆவிகள் என்றும், கூறப்படுகின்றது.இந்த ஆவிகளுக்கு கால்கள் இல்லை என்றும் இவை மரங்கள் மயானங்கள்,
பாழடைந்த கட்டிடங்கள், தங்கியிருக்கும் என்று இரவு வேளைகளிலேயே அதிகம் நடமாடும் என்றும்- சொல்லப்படுவதுண்டு.

விஞ்ஞானரீதியாகப் பார்த்தால் ஒரு மனிதனின் மரணம் என்பது அவனது மூளையும் இதயமும் செயலற்றுப் போவதாகும், மூளை செயலற்று விட்டால் அல்லது இறந்துவிட்டால் சகல
அசைவுகளும் நின்றுவிடும் அதில் உள்ள ஞாபகங்கள், பதிவுகள் எல்லாமே அழிந்துவிடும். அது போல் இதயம் செயலற்று போய்விட்டால் இரத்த ஓட்டம் நின்றுவிடும், சுவாசம் நின்றுவிடும் இவையனைத்தும் ஒரு சேரநிகழும்போது ஒரு மனிதன் மரணமடைந்து விட்டதாக மருத்துவரீதியாக சொல்லப்படுகிறது.

ஒரு மனிதன் மரணம் அடைகின்றபோது மூக்கு மற்றும் ஏனைய துவாரங்கள் வாயிலாக அவன் ஏற்கனவே சுவாசித்த காற்று மட்டும்தான் வெளியேறுகிறது, ஆவி என்றோ உயிர் என்றோ, ஆன்மா என்றோ ஒன்றும் வெளியேறுவதில்லை, ஒரு மனிதனின் கடைசி மூச்சாக வெளியேறும் காற்றை எடுத்து பரிசோதித்தால் அதில் காபனீரொட்சைட்டும், ஒட்சிசன், நீராவி, முதலான வாயுக்கள்தான் இருக்கும்.

ஓரு இயந்திரம் , அல்லது தன்னுடைய செயற்பாட்டுத்திறனை இழந்து விட்ட ஒரு துப்பாக்கி தனது கடைசி செயற்பாட்டுடன் செயலற்றுப்போகும் போது என்ன நடக்குமோ ஒரு மனிதன் இறக்கும் போதும் அதுதான் நடக்கிறது. ஓரு பழுதடைந்த செயலற்று போன இயந்திரத்தின் பாகங்கள் பிரித்தெடுத்து வெறோரு இயந்திரத்திற்கு பொருத்துவதை போலவே இறப்புக்குள்ளாகும் மனிதனின் கண், சிறுநீரகம், இதயம், முதலான பல உறுப்புக்கள் , இந்த உறுப்புக்களில் பழுதுள்ள வேறோரு மனிதர்களுக்கு பொருத்தப்படுகின்றன.
ஏனவே மனிதனின் மரணத்தின் போது இயமன் எருமைக்கிடாயில் வந்து பாசக்கயிற்றை விசி உயிரை எடுத்துக்செல்கிறான் , என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதையாகும்.

அப்படி என்றால் ஆவி அல்லது பேய் என்று சொல்லப்படுவ தெல்லாம் என்ன?
இது ஒரு மனப்பயம் அல்லது பிரம்மை என்று சொல்லலாம் ஒரு மனிதன், உயிருடன் இருக்கும்போது நடந்துகொண்ட விதம் பேசிய பேச்சுக்கள், செய்த செயல்கள் இவையல்லாம்
மற்றவர்களுடைய மனங்களில் பதிவாகின்றன இந்தப்பதிவுகள் அந்த மனிதன் இறந்தவுடன் நினைவுகளாகின்றன.இறந்த அந்த மனிதனுடன் மிக நெருக்கமாக பழகியவர்களுக்கும் (குடும்பத்தினர்,உறவினர்,நண்பகள்) அந்தமனிதர்களுக்கு தீங்கிளைத்த வர்களையும், அவனது இழப்பை சுலபமாக ஏற்றுக்கொள்ளாத முடியாத நிலையிருக்கும் அந்த மனிதனுடைய உடல் எரிந்து சாம்பலாகும் காட்சியை பார்க்காதவர்களுக்கு இந்த நிலை அதிகம் இருக்கும் அவர்களது மூளைக்கலங்கள் அந்த மனிதனின் இழப்பை சுலபமாக ஏற்றுக் கொள்வதில்லை. அந்த மனிதன் விட்டுச்சென்ற தடயங்கள் அல்லது அந்த மனிதனைப்பற்றிய
நினைப்பு வரும்போது அவன் உயிரோடு தங்களுடன் வாழ்கின்றான், என்றோரு பிரம்மை உருவாகின்றது, இவை தான் பேய் பிசாசுகள் தொடர்பான கட்டுக்கதைகளுக்கு அடிப்படையாக அமைகின்றன. பகலில் கடும் வெய்யில் காலத்தில் பரந்த வெளியில் நீங்கள் சென்றால்துரத்தில் தண்ணீர் ஓடுவது போன்ற ஒரு காட்சியை நீங்கள் பார்க்கமுடியும். ஆனால் கிட்டச் சென்று பார்த்தால் எதுவும் இருக்காது இதை கானல் நீர் என்று சொல்வார்கள், அதாவது சூரியஒளி தரையில் பட்டு தெறிக்கும்போது இது ஏற்படுகிறது.

இதே போலவே இரவில் காட்டுப்பகுதிகள் மற்றும் வயல் வெளிகள், சதுப்பு நிலங்களில் மங்கலாக சில பொருட்கள் அசைந்து செல்வதைப்போல காட்சிகள் தென்படும், இவையும், அந்த பகுதிகளில் உள்ள இரவு வெப்பநிலை மற்றும் பனிமூட்டத்தால் இவ்வாறு தென்படுகின்றன.

மொத்தத்தில் பேய் பிசாசு என்பது எங்களுடைய நினைப்பில்தான் இருக்கிறதே தவிர வெளியில் இல்லை.சில சதுப்பு நிலங்களில் திடீரென்று தீப்பற்றிக் கொண்டு அந்த
தீப்பிழம்புகள் காற்றில் மிதந்து செல்வதுண்டு இதைத்தான் கொள்ளிவால் பேய் என்று சொல்கிறார்கள் இந்தப் பேய் ஆட்கள் கிட்டப்போனால் அடித்து எரித்துக் கொன்று
விடும் என்றெல்லாம் கதை சொல்லப்படுவதுண்டு.

உண்மையில் சதுப்பு நிலத்துக்கு அடியில் இருக்கும் அடர்த்திகுறைந்த வாயுக்கள்
அமுக்கம் காரணமாக வெளியில் வரும்போது தீப்பற்றிக் கொள்கின்றன. இந்த தீயை கொள்ளிவால் பேய் என்று நினைத்து பயந்து ஒடுவர் ஓட முற்பட்டால், அந்த தீப்பிழம்பு அவரை துரத்திச்செல்லும் இது எனென்றால் நாங்கள் ஓடும்போது காற்றை கிழித்துக்கொண்டுதான் ஒடுகின்றோம். இவ்வாறு ஓடும்போது எங்கள் முதுகுக்குபின்னால் ஒரு வெற்றிடம் வரும், அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு
அருகில் உள்ள காற்று வரும்போது அதில் மிதந்து கொண்டு இருக்கும் இந்த தீப் பிழம்பும் ஓடிவரும் இதைத்தான் கௌ;ளிவால் போய் துரத்துகின்றது என்று கிளைந்து பலர் உயிரிழந்து விடுகின்றார்கள் இந்த உயிரிழப்பிற்கு காரணம் பயத்தினால் வரும் மாரடைப்புத்தான் அடுத்து நாங்கள் சில இடங்களில் சில வீடுகளில் படுத்து உறங்கும் போது அது பகலாய் இருந்தாலென்ன இரவாக இருந்தாலென்ன எங்களுக்கு ஏதோ ஆபத்து வருவதைப்போலவும் எங்களை யாரோ கொல்ல வருவதைப் போலவும் கனவு வரும். நாங்கள் கத்திப் பார்ப்போம் குரல் வெளியே வராது, எழும்பி ஓடப்பார்ப்போம், உடம்பு அசையாது, இப்படி ஒரு விசித்திரமான நிலை உங்களில் பலருக்கும் வந்திருக்கலாம்
இவ்வாறு நடப்பது பேயின் வேலை என்றும் இந்தப் பேய்க்கு அழுக்குப் பேய் என்றும் என்றும் நம்மவர்கள் பேரும் வைத்திருக்கின்றார்கள. இரவில் தன்pயாகச் சென்றால்
காற்றுக் கறுப்புப்பிடித்து வருத்தம் வரும் என்றும் மோகினிப் பேய் பிடித்துவிடும் என்றும் நமது கிராமங்களில் சொல்லக் கேட்டிப்பீர்கள். குழந்தைகளை இரவில் வெளியில் கொண்டு சென்றாலும் இப்படி சொல்வதுன்டு இரவில் சாப்பாட்டை
வெளியில் எடுத்துச் செண்றாலும் பேய் அதிலுள்ள சாற்றை உறிஞ்சி விடும் என்றும் கிராமத்து மக்கள் சொல்வதுன்டு. இதற்காக இரவில் சாப்பாட்டை வெளியில் கொண்டு செல்லும் போது கரித்துண்டு ஒன்;றை (கார்பன் ) அதற்குள் போடுவதுன்டு அல்லது இரும்புக்கம்பி ஒன்றை கூடவே எடுத்து செல்வதுன்டு (இப்படிச் செய்தால் பேய் வராது
என்பது அவர்களது நம்பிக்கை ) உண்மையில் நாம் உயிர் வாடுகின்ற இந்தப் புமியில் மேற்பரப்பில் பல்வேறு மின் காந்த அலைகளும், சூரியக் குடும்பத்திலே உள்ள பல்வேறு
கோள்களினதும் உப கோள்களினதும் கதிர் வீச்சு சக்தி அலைகளும் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டிருக்கும், அதேபோல மனிதனுக்கு கெடுதி விளைவிக்கக் கூடிய கொடிய வைரசுகளும் பக்டீரியாக்களும் கூடக்காற்றில் அலைந்து கொண்டிருக்கும் சூரிய சக்திக்கு இயல்பாகவே அனைத்துப் பொருட்களையும் எரிக்கும் சூடாக்கி
விரிவடையச்செய்யும் தன்மை இருக்கிறது பகலில் நாம் நடமாடும் போது சூரியக்கதிர்கள் ஓரளவிற்கு எம்மை பாதுகாக்கின்றன ஆனால் இரவில் அவ்வாறான தன்மைகள் மிகக் குறைவு அதனாலேயே இரவில் காடுகள், வயல்வெளிகள், சதுப்புநிலங்கள் கடற்கரைகள் என்று பயணம் செய்பவர்களின் உடலில் கதிர்வீச்சுத் தாக்கமும்
நோய்க்கிருமிகளின் தொற்றும் ஏற்பட வாய்பும் அதிகமாக இருக்கிறது.

இதனாலேயே இரவில் வெளியே சென்று விட்டு வருபவர்கள் (சில இடங்களில் பகலில் கூட ) குளித்துவிட்டு அல்லது கை கால் கழுவிவிட்டு வீட்டுக்குள் வரவேண்டும் அவ்வாறு
செய்யாவிட்டால் பிள்ளைகளுக்குக் கூடாது என்று நமது பெரியவர்கள் சொல்வதுண்டு.அவர்கள் பேய் பிசாசுகளோடு சம்மந்தப்படுத்தி இதைச் சொன்னாலும் இதற்குரிய அடிப்படைக்காரணம் இதுதான்உணவை வெளியில் எடுத்துச்செல்லும் போது கூட இது தான் நடக்கிறது பொதுவாக கரிக்கு (கார்பன் ) அல்லது இரும்புக்கு கதிர்களை
உறிஞ்சும் சக்தி இருக்கின்றது, இதனாலேயே அவற்றை உணவில் போட்டு எடுத்துச்செல்லும் வழக்கம் இருக்கிறது.

உணவு பழுதாகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இது சொல்லப்பட்டதே அன்றி பேய் பிசாசு சத்தை உறிஞ்சி விடும் கூடிக்கொன்டு வந்துவிடும் என்பதற்காகவல்ல.

Thursday, December 24, 2009

2009 நோபல் நாயகர்கள்

இயற்பியல்:

இயற்பியலுக்கான நோபல் பரிசு அக்டோபர் 6ந் தேதி அறிவிக்கப்பட்டது. தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தில் 2 புதிய கண்டுபிடிப்புகளுக்கு இந்த விருது கிடைத்து உள்ளது. சீனாவைச் சேர்ந்த சார்லஸ் கே காவ் (75), அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் இஸ்மித், கனடாவைச் சேர்ந்த வில்லார்ட் எஸ்பாய்லே (85), ஆகிய மூவர் இந்தப் பரிசை பகிர்ந்து கொள்கின்றார்கள்.

வேதியியல்:

வேதியியலுக்கான பரிசையும் 3 பேர் பகிர்ந்து கொள்கின்றார்கள். அமெரிக்க வாழ் இந்தியரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், இஸ்ரேலைச் சேர்ந்த பெடா இயோனந்த,அமெரிக்காவைச் சேர்ந்த தாமஸ் ஸ்டீட்ஸ் ஆகியோர் வேதியியல் நோபல் பரிசை பெறுகிறார்கள். அக்டோபர் 7 ந்தேதி இந்தப் பரிசு அறிவிக்கப்பட்டது.

இலக்கியம்:

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அக்டோபர் 8ந் தேதி அறிவிக்கப்பட்டது. ருமேனியா நாட்டைச் சேர்ந்த ஹெர்டா முல்லர் என்பவரின் படைப்புக்கு இந்த பரிசு கிடைத்துள்ளது.

அமைதி:

அமைதிக்கான நோபல் பரிசு அக்டோபர் 9 ந் தேதி அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அறிவிக்கப்பட்டது. உலக சமாதானம் மற்றும் உலக நாடுகளில் அணு ஆயுதக் குறைப்பு நடவடிக்கைகளுக்காக பாடுபட்டதற்காக, ஒபாமாவுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

மருத்துவம்:

இந்த ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. எலிஷபெத் எச். பிளக்பர்ன், கேரோல் டபுள்யு கிரிடியர், ஜேக் டபிள்யூ. ஷீஸ்டாக் ஆகியோர் இந்தப் பரிசை பெற தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

பொருளாதாரம்:

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அக்டோபர் 12ந் தேதி அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த எலினோர் ஆஸ்ட்ரோம், ஆலிவர் இ.வில்லியம்சன் ஆகியோர் இந்தப் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பரிசுக்குழு அறிவித்தது.


சிவனைப் பூஜிப்-பதன் மூலம் கடன் தொல்லை நீங்கும்..

நாளிதழ்கள் வாரந்-தோறும் ஆன்மிகச் சிறப்பு இதழ்களைப் போட்டி போட்டுக்-கொண்டு வெளியிடுகின்-றன. பண்டிகைகள் வந்து-விட்டால் அவற்றின் பெய-ராலும் சிறப்பிதழ்கள் வந்துவிடும். புத்தாண்டு பிறக்கிறதா? உடனே “புத்-தாண்டுப் பலன்கள்’’ என்ற தலைப்பில் தலை-காட்டும்.


இதில் என்ன வேடிக்கை என்றால், ஆங்-கிலப் புத்-தாண்டுக்கும்கூட இது-போன்ற சிறப்பிதழ்கள்; ஆங்கிலப் புத்தாண்டுக்-கும், இந்து மத ராசி பலன்-களுக்கும் என்ன சம்பந்தம்?

சங்கராச்சாரியார்கள்கூட சொல்லிப் பார்த்தார்கள் ஆங்கிலப் புத்தாண்டுக்-காக கோயில் நடையைத் திறக்காதீர்கள்; இரவில் இந்து மதக் கோயில்-களைத் திறந்து வைப்பது, சாஸ்திர விரோதம் -_ ஆகம விரோதம் என்று அவர்கள் கத்திப் பார்த்து என்ன பிரயோசனம்?

கோயில் நடைகள் திறக்கப்பட்டன; பட்டர்-களுக்கும், பார்ப்பனர்-களுக்-கும் வருவாய்க் குவியல்; சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிடுவார்-களா, என்ன?

ஆன்மிக இதழில் கை சரக்குகளை அவிழ்த்துக் கொட்டுபவர்கள் சர்வ ஜாக்-கிரதையாக சில வார்த்-தைகளைப் பயன்படுத்து-வதைக் கவனிக்கவேண்-டும்.

மக்கள் நம்பிக்கை; .... என்பது புராணம்; ..... என்பது அய்திகம்; .... என்பது புராணம் என்று கழுவும் மீனில் நழுவும் மீனாக வார்த்தைகளைக் கையாளுவார்கள்.

இவர்கள் எழுதுவதை நம்பி பக்தர்கள் கடை-பிடித்து காரியம் ஆகா-விட்டால், நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாமே _ அல்-லது ‘நீ வெளியிட்டதை நம்பித் தானே இந்தக் காரியத்தில் இறங்கினேன்; கடைசியில் காரியம் கெட்டுப் போய்விட்டதே’ என்று பக்தர்கள் சண்-டைக்கு வந்தால் என்ன செய்-வது? அதற்காகத்தான் இத்தகைய ஏமாற்று வார்த்தைகள்.

ஒரு மாலை ஏட்டின் புத்தாண்டு சிறப்பிதழில் ஒரு செய்தி:

கடன் வாங்கி திரும்-பக் கொடுக்க முடியாமல் தவிப்பவர்களுக்கென்றே தஞ்சை மாவட்டம் திருச்-சேறையில் சாரபரமேஸ்-வர் கோயில் உள்ளது. இவர் ரண ருண ஈஸ்வரர் என்று அழைக்கப்படு-கிறார். ரணம் என்றால் நோய், ருணம் என்றால் கடன் என்று பொருள்.

இந்த சிவனைப் பூஜிப்-பதன் மூலம் கடன் தொல்லை நீங்கும் என்-பது பக்தர்களின் நம்-பிக்கை.

இப்படியாக எழுது-கிறது அந்த இதழ்.

கடன் தொல்லை எப்படி நீங்கும்? கடன் கொடுத்தவன் கேட்கமாட்-டானா? அல்லது கடன் வாங்கியவன் திருப்பிச் செலுத்த அவன் பீரோவுக்-குள் நோட்டுக் கத்தை-களை கொண்டு வந்து சிவன் திணித்துவிட்டுப் போய்விடுவாரா? (சிவன், கள்ள நோட்டு அடிப்-பாரோ!).

இன்னொரு வகையில் பார்த்தால், துணிந்து கடனை வாங்கிக்கொண்டு, திருப்பிச் செலுத்த வேண்-டியதில்லை; சிவன் பார்த்-துக் கொள்வான் என்கிற மோசடி எண்ணத்தைத்-தானே இந்த ஆன்மிகம் கற்றுக் கொடுக்கிறது? மக்-களை மோசடி செய்யத் தூண்டும் இதுபோன்ற நடவடிக்கைகள் தடை செய்யப்படவேண்டாமா?
- விடுதலை (23.12.09) மயிலாடன்

Sunday, December 20, 2009

99 சதவீத கனடா மக்களின் தீர்வு


வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்காக கனடியத் தமிழ் மக்களிடையே,19. 2009 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 9 மணி வரை நடத்தப்பட்ட வாக்குக்கணிப்பு மொத்தமாக 48,583 வாக்காளர்கள் வரலாறாகி தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். அதில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு ஆதரவாக 'ஆம்' என்று 48,481 வாக்குகளும், எதிராக 'இல்லை' என்று 85 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அத்துடன் 17 வாக்குகள் செல்லுபடியற்றவையாக தேர்தல் நிறுவனத்தினால் நிராகரிக்கப்பட்டன.இதன்பிரகாரம் 99.82 வீதமான மக்களால் வட்டுக்கோட்டைத் தீர்மானம் 'ஆம்' என்று வாக்களிக்கப்பட்டதால் வாக்களிப்பில் 'ஆம்' வெற்றி பெற்றதாக தேர்தல் நிறுவனத்தினால் உத்தியோகபூர்வ முடிவாக அறிவிக்கப்பட்டது.தேர்தலை நடத்திய நுளுரூளு என்ற நிறுவனம் 40 ஆண்டுகளாக சனாதிபதித் தேர்தல் முதற்கொண்டு பல்வேறு தேர்தல்களை நடத்தி பெயர்பெற்ற வட அமெரிக்க தேர்தல் நிறுவனம் என்பது குறிப்பிடத் தக்கது.நேர்த்தியான தொழிநுட்பத்துடன் கூடிய இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரங்கள் மூலம் நடத்தப்பட்ட தேர்தலாகையால், தேர்தல் முடிந்த சில நிமிட நேரங்களிலேயே முடிவுகள் வெளிவர ஆரம்பித்தன.கனடாவில் எந்த ஒரு சமூகமும் முனையாத முன்முயற்சியாக சனநாயக ரீதியாக அமைந்த இவ்வாக்குக்கணிப்பை கனடிய தேசிய ஊடகங்கள் பலவும் முதன்மையாகவும் தொடர்ச்சியாகவும் ஒலி-ஒளி பரப்பியமை முக்கிய விடயமாகக் நோக்கத் தக்கது.தொகுதிவாரியான தேர்தல் பற்றிய முழு விபரம் பின்னர் அறியத் தரப்படும்.கன்டாவில் தீர்ப்புவட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்காக கனடியத் தமிழ் மக்களிடையே, 19௧2௨009 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 9 மணி வரை நடத்தப்பட்ட வாக்குக்கணிப்பு மொத்தமாக 48,583 வாக்காளர்கள் வரலாறாகி தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். அதில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு ஆதரவாக 'ஆம்' என்று 48,481 வாக்குகளும், எதிராக 'இல்லை' என்று 85 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அத்துடன் 17 வாக்குகள் செல்லுபடியற்றவையாக தேர்தல் நிறுவனத்தினால் நிராகரிக்கப்பட்டன.இதன்பிரகாரம் 99.82 வீதமான மக்களால் வட்டுக்கோட்டைத் தீர்மானம் 'ஆம்' என்று வாக்களிக்கப்பட்டதால் வாக்களிப்பில் 'ஆம்' வெற்றி பெற்றதாக தேர்தல் நிறுவனத்தினால் உத்தியோகபூர்வ முடிவாக அறிவிக்கப்பட்டது.தேர்தலை நடத்திய நுளுரூளு என்ற நிறுவனம் 40 ஆண்டுகளாக சனாதிபதித் தேர்தல் முதற்கொண்டு பல்வேறு தேர்தல்களை நடத்தி பெயர்பெற்ற வட அமெரிக்க தேர்தல் நிறுவனம் என்பது குறிப்பிடத் தக்கது.நேர்த்தியான தொழிநுட்பத்துடன் கூடிய இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரங்கள் மூலம் நடத்தப்பட்ட தேர்தலாகையால், தேர்தல் முடிந்த சில நிமிட நேரங்களிலேயே முடிவுகள் வெளிவர ஆரம்பித்தன.கனடாவில் எந்த ஒரு சமூகமும் முனையாத முன்முயற்சியாக சனநாயக ரீதியாக அமைந்த இவ்வாக்குக்கணிப்பை கனடிய தேசிய ஊடகங்கள் பலவும் முதன்மையாகவும் தொடர்ச்சியாகவும் ஒலி-ஒளி பரப்பியமை முக்கிய விடயமாகக் நோக்கத் தக்கது.தொகுதிவாரியான தேர்தல் பற்றிய முழு விபரம் பின்னர் அறியத் தரப்படும்.
(நன்றி -அதிர்வு)

எங்கே ஓடி மறைந்தீர்கள்?

காஞ்சிபுரம் மச்சேஸ்வரன் கோவில் பார்ப்பன அர்ச்சகர் தேவநாதன், கோயில் கர்ப்பக்கிரகத்துக்குள் அர்ச்சனை செய்கிறார், “சூத்திரர்” நுழைந்தால் தீட்டாகிவிடும் என்று பார்ப்பனர்கள் உச்ச நீதிமன்றம் போய் வழக்காடும் “கர்ப்பகிரகத்துக்குள்”, “மச்சேஸ்வரன்”கள் முன்னாலே பல பெண்களுடன் “கிருஷ்ண லீலை”களை (அதாவது பாலுறவுகள்) நடத்தியுள்ளார். ஆகமவிதிப்படி அங்கீகரிக்கப்பட்டவரான இந்த புனிதரின் பக்தி நடவடிக்கைகள் அலைபேசி வழியாக படம் பிடிக்கப்பட்டது. அதை ஜூனியர் விகடன் ஏடு படத்துடன் பரபரப்பாக அம்பலப்படுத்தியது.

பிறகு “பிராமண குல” ஒழுக்க சீலரின் விளையாட்டுகள் குறுந்தகடுகளில் பதிவாக்கப்பட்டு, நாடு முழுதும் கடைகளில் அமோக விற்பனையாயின. சில வாரங்கள் தலைமறைவாகி, பிறகு காவல்துறையிடம் ‘ஆகம விற்பன்னர்’ சரணடைந்தார். இப்போது காவல்துறையில் விசாரிக்கப்படுகிறார். காஞ்சிபுரம் பெருநகர நீதிபதி காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்க 2 நாள்கள் மட்டுமே அனுமதித்தார். காவல்துறையோ, குறைந்தது 5 நாளாவது காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

வழக்கின் நேரிடை சாட்சி ‘மச்சேசுவரன்’; “அவன்” சாட்சி சொல்ல வரமாட்டான் என்பது கருவறைக்குள்ளேயே இருக்கும் தேவநாதனுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும், அலைபேசிப் பதிவுகள் சாட்சியாகிவிட்டன.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்குள் சங்கர்ராமன் வெட்டி வீழ்த்தப்பட்டார். கொலைக் குற்றச்சாட்டு காஞ்சி ஜெயந்திரன் மீது திரும்பி, குற்றவாளிக் கூண்டில் நிற்கிறார். அதே காஞ்சியில் ‘மச்சேஸ்வரன்’ கருவறைக்குள் இந்த ‘பாலுறவு’களை பார்ப்பன அர்ச்சகர் நடத்தியிருக்கிறார்.

இந்துக்கள் உள்ளத்தை பகுத்தறிவாளர்கள் புண்படுத்துவதாக அவ்வப்போது ஓலமிடும் இராம கோபாலன், இல. கணேசன், துக்ளக் சோ, சு.சாமி குழுவினர், எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. வாயை இறுகக் கட்டிக் கொண்டு விட்டார்களே!

“சூத்திரன்” கருவறைக்குள் நுழைந்தால் சாமி தீட்டாகிவிடும் என்று கூறும் பார்ப்பன சிரோன்மணிகளே!

பார்ப்பான் கருவறைக்குள் பெண்களை பாலுறவு கொண்டால் கருவறை புனிதம் பெற்று விடுமா?

எங்கே, மானம் சூடு சொரணை இருந்தால் பதில் சொல் பார்க்கலாம்!

Saturday, December 19, 2009

இந்தியா உருவானது எப்படி?


ஆங்கிலேயர்கள் இந்தியா வருவதற்கு முன், இப்போது இருக்கும் இந்தியா என்ற நாடு இருந்ததா என்ற கேள்விக்கு, இல்லை என்பதே எல்லோருக்கும் தெரிந்த பதில். வட இந்தியாவை எடுத்துக் கொணடால், அதன் 1800 ஆண்டு வரலாற்றில், ஒரே பகுதியாக இருந்ததாக வரலாறு கிடையாது. மவுரியர்,கனிஷ்கர், குப்தர், அர்ஷவர்த்தனர், சுல்தான்கள், பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர். தனித்தனி நிலப் பகுதிகளில், தனித்தனி ஆட்சிகளே நடந்தன. ஒரே குடையின் கீழ் பெரும் நிலப்பகுதி கொண்டு வரப்பட்டபோது கூட, தன்னாட்சிகளை அழித்து விடவில்லை.

மராத்தியை மய்யமாகக் கொண்ட மத்திய இந்திய பகுதி, தக்காணிப் பிரதேசம் என்று அழைக்கப்படுவ தாகும். இங்கும், தனித்தனிப் பிரதேசங்களும், தனித்தனி ஆட்சிகளுமே நடந்திருக் கின்றன. மராத்தி, ஒரிசா,கன்னடம் மற்றும் ஆந்திரப் பகுதி களைக் கொண்ட இந்தத் தக்காணப் பிரதேசத்தில் சாத வாகணர் என்ற ஆந்திரர்கள், சாளுக்கி யர், ராஷ்டிரகூடர்,கங்கர், கடம்பர் என்று பல் வேறு வம்சத்தினரின் ஆட்சி கள், தனித்தனிப் பகுதிகளில் நடந்தன.

13 ஆம் நூற்றாண்டில், வட இந்தியாவி லிருந்து, மொகலாயர்கள் படை எடுத்து வந்து, தக்காணத்தின் வடபகுதியைக் கைப்பற்றினர். அப்போது தக்காணத் தென்பகுதியில் விஜயநகரப் பேரரசு இருந்தது. இது, மத்திய இந்தியாவின் நிலை என்றால், தென்னிந்தியாவின் வர லாறு என்ன? சேரர்,சோழர், பாண்டியர், களப்பிரர், பல்லவர் மற்றும் குறுநில மன்னர்களின் ஆட்சிகளுக்குட்பட்ட, தனித் தனிப் பிரதேசங்கள்தான் இருந்தன. இந்திய வரலாற்றில், பெரும் நிலப் பகுதியைக் கைப்பற்றி, பல தனி யாட்சிகளை ஒழித்து - ஒரு முக ஆட்சியை உருவாக்கியவர்கள் மொக லாயர்கள் தான்!

மொகலாயர்கள் பேரரசு நடந்த காலத்தில்தான் பார்ப்பனர்கள் நாடு முழுவதும், சமூக அரங்கில் தங்கள் ஆதிக்கத்தை நிலைப்படுத்திக் கொண் டார்கள். இந்தியாவில் வாழ்ந்த முஸ்லிம் அல்லாத பல்வேறு இனக் குழுக்களை, பார்ப்பனர்கள் தங்கள் மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வந்ததும் இந்தக் காலத்தில் தான். முஸ்லிம் அல்லாத எல்லோரையும், மொகலாய மன்னர்கள் இந்துஎன்று கூறியதும், ‘இந்துஎன்ற பெயர் வழக்கில் வந்ததும்,அக்காலத்தில் தான். சமஸ் கிருத சுலோகங்களையும், வேதங்களை யும் பார்ப்பனர்கள், தங்கள் சுயநலச் சுரண்டலுக்கு ஏற்ப திருத்தி அமைத்துக் கொண்டதும் அப்போதுதான்.

அப்போதும் தமிழ்நாடு மொக லாயர்கள் ஆட்சியின் கீழ் வரவில்லை. அத்தகைய மொகலாயப் பேரரசுகூட, அவுரங்கசீப்புக்குப் பிறகு வீழ்ந்து விட்டது. அதன் பிறகு 66 ஆண்டு களுக்கு, இந்தியத் துணைக் கண்டத்தைக் கட்டி ஆளும் ஒரே மய்ய அரசு எதுவும் உருவாகியதில்லை. ஆங்கிலேயரின் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பெனிதான் இங்கே குறி வைத்தது. இந்த வர்த்தகக் கம்பெனி உருவாக்கப் பட்ட நாள் 1.12.1600. இந்திய அரசர் களிடம் உரிமை வாங்கிக் கொண்டு, கடற்கரை ஓரமாக தங்களது வர்த்தகக் குடியேற்றங்களை இவர்கள் ஏற் படுத்திக் கொண்டனர். கி.பி. 1612 இல் முதன்முதலாக சூரத்திலும் தொடர்ந்து மசூலிப்பட்டிணம் (1616), அரிகர்பூர் (1633), சென்னை (1640), பம்பாய் (1669), கல்கத்தாவிலும் (1686) வர்த்தகக் குடியேற்றங்களை நிறுவினர்.

வர்த்தகம் செய்ய வந்தவர்கள், நாடு பிடிக்கும் ஆசையை விட்டு விடுவார் களா? இந்தக் கம்பெனி வெறும் கை யுடன் வந்துவிடவில்லை. தனக் காக ஒரு கடற்படையை வைத்துக் கொள்ளவும், தேவையான சட்டங்களை இயற்றிக் கொள்ளவும் பிரிட்டிஷ் ராணியிடம் உரிமை பெற்றிருந்தது. முதலில் மேற்கு வங்கத்தில் உள்ள சிட்டகாங் பகுதியைத் தாக்கி தோல்வி கண்டார்கள். பிரிட்டிஷ் கம்பெனி நாட்டை விட்டே வெளி யேற வேண்டும் என்று உத்தரவு போட்ட அவுரகசீப் மரணமடைந் தார். (கி.பி.1707) பேரரசு சிதைந்து, தனித்தனி ஆட்சிகள் உருவானது. தனது அதிகாரத்தை உறுதிப் படுத்த நேரம் பார்த்துக் கொண்டிருந்த ஆங்கிலேயர்களுக்கு நல்ல வாய்ப்பாகி விட்டது.

ராபர்ட் கிளைவ், ஆற்காடு பகுதியைப் பிடித்தார் (கி.பி.1749) தொடர்ந்து 12ஆண்டுகள் போர் நடத்தி தென்னிந்தி யாவின் பல பகுதிகளைப் பிடித்தனர். கருநாடகப் போர்கள் மூலம் ஆந்திரத் தின் பெரும் பகுதியைக் கைப்பற்றினர். வெற்றி களைக் குவித்த ராபர்ட் கிளைவ் வடக்கே போனார். பிளாசி யுத்தம் நடத்தினார்; அதில் வங்கம் வீழ்ந்தது. அதைத் தொடர்ந்து ஒரு நூற்றாண்டில், படிப்படியாக ஆங்கிலேயர்கள் கைப் பற்றிய பல்வேறு பகுதிகள்தான் இந்தியா. ஆங்கிலேயர் ஆட்சி செய்த இந்தியாவில், இன்றைய ஆப்கானிஸ்தான் நாட்டின் பெரும் பகுதியும், பர்மாவும் (இன்றைய மியான்மர் நாடு) இலங்கையும் அடங்கி இருந்தது.

அப்போது இலங்கை ஒரு மாவட்ட மாகக் கூட அங்கீகரிக்கப்படவில்லை;ஒரு வட்டமாகவே கருதப்பட்டு, அதன் நிர் வாக அலுவலகமே தமிழநாட்டில் தான் இருந்தது. இன்றைய பாகிஸ் தானும் பங்களாதேசும் அன்றையஇந்தியாதான். இப்போதுள்ள வட கிழக்கு மாநிலங்களோ, காஷ்மீரோ அன்றைய இந்தியாவில் இல்லை. ஆக, 3000 ஆண்டு கால வரலாற்றில் - தனித் தனிப் பகுதி களாக நிலவிய தேசங்களை - துப்பாக்கி முனையில் மிரட்டி, ஆங்கிலே யர்களால் உருவாக்கப்பட்ட நாடுதான் இந்தியா’.

இன்னொறு இடுகை

Related Posts with Thumbnails